Untitled
அரசியல்இலங்கைசெய்திகள்

பயங்கரவாத சட்டம் – எதிர்ப்பினை வெளிப்படுத்த பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு கோரிக்கை!

Share

பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்திற்கு பாராளுமன்ற உறுப்பினர்களும் எதிர்ப்பினை வெளிப்படுத்த வேண்டும் என அகில இலங்கை தொழிலாளர் சமூகங்களின் கூட்டமைப்பின் தேசிய அமைப்பாளர் அன்ரனி ஜேசுதாசன் தெரிவித்தார்.

அகில இலங்கை தொழிலாளர் சமூகங்களின் கூட்டமைப்பினர் இன்று யாழ்ப்பாணத்தில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போது மேற்கண்டவாறு தெரிவித்தார்.

பயங்கரவாத தடைச்சட்டம் தமிழர்களை இலக்கு வைத்து அவர்களுடைய அரசியல் போராட்டங்களை நசுக்குவதற்காக கொண்டுவரப்பட்டது.

அதன் பின்னர் இலங்கையில் கடந்த வருடங்களில் ஏற்பட்ட போராட்டங்களின் போது சிங்கள இளைஞர்கள் இந்த பயங்கரவாத சட்டத்தின் ஊடாக கைது செய்து தடுத்து வைக்கப்பட்டபோதுதான் சிங்கள மக்களும் விழித்துக் கொண்டு இந்த பயங்கரவா தடைச்சட்டம் இலங்கையில்அமுலில் இருக்கக்கூடாது என கூறி போராட்டங்களை முன்னெடுத்தார்கள் கலந்துரையாடல்களையும் முன்னெடுத்தார்கள்.

இப்பொழுது விஜயதாச ராஜபக்ச என்கின்ற நீதி அமைச்சர் இவர் காலத்துக்கு காலம் தன்னுடைய கதிரையை தக்க வைத்துக் கொள்வதற்காக காலத்துக்கு காலம் அங்குமிங்கும் தெரிகின்ற ஒரு அமைச்சர் அவருடைய தலைமையிலே இப்பொழுது பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் என்ற புதிதாக ஒரு சட்டம் கொண்டுவரப்படுகின்றது.

பயங்கரவாத தடைச்சட்டத்திற்கு எதிராக நாங்கள் குரல் கொடுத்து அதை ஒட்டுமொத்தமாக இலங்கையிலே வாபஸ் பெற வேண்டும் இல்லாமல் செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்துக்கொண்டிருக்கின்ற காலத்திலே அதற்கு மாறாக ஒரு சட்டத்தை கொண்டு வருகின்றோம் என்று கூறும் அரசாங்கம் தற்போது பயங்கரவா தடைச்சட்டத்திற்கு மேலாக மிகவும் பாதிப்பை ஏற்படுத்துகின்ற ஒரு சட்டத்தினை கொண்டு வருவதற்கான முயற்சியில் ஈடுபட்டு இருக்கின்றார்கள்.

ஆகவே விஜயதாச ராஜபக்ச உட்பட ரணில் விக்கிரம சிங்க அவர்களுடைய ஆட்சியிலே சட்டத்தை கொண்டு வந்து சாதாரண மக்கள் தொழிலாளர்களாக இருக்கலாம் விவசாயிகளாக இருக்கலாம் மீனவர்களாக இருக்கலாம்.

குறிப்பாக இந்த நாட்டினுடைய மக்களுடைய உரிமைகளுக்காக போராடுகின்ற சிவில் அமைப்புகள் வீதியில் இறங்கி போராடுவதை தடுப்பதற்கானஒரு சட்டமாக கொண்டு வர இருக்கின்றார்கள்.

இந்த சட்டம் வரும் என்றால் இலங்கை அரசியல் யாப்பில் மூன்றாம் அதிகாரத்தில் இருக்கின்ற அடிப்படை உரிமைகள் மறுக்கப்படும். அடுத்து சுதந்திரம் முழுமையாக பறிக்கப்படும் ஒன்று கூடுவதற்கான சுதந்திரம் முழுமையாக பறிக்கப்படும்.

அதேநேரம் நீதிமன்றத்தினுடைய அதிகாரம் பொலிஸ்மா அதிபருக்கு வழங்கப்படும் பொலிஸ்மா அதிபர் தான் நினைத்தவாறு செயற்படக்கூடிய ஒருநிலை ஏற்படப்போகிறது. எனவே எதிர்காலத்தில் ஒரு நீதிபதிக்கு நடவடிக்கை எடுக்க முடியாத நிலை ஏற்படப் போகின்றது.

நீதி அமைச்சர் கூறுகின்றார். உலகின் முக்கியமான வல்லரசு நாடுகளில் இந்த சட்டம் நடைமுறையில் உள்ளது என அந்த நாட்டில் பயங்கரவாதத்திற்கு கொடுக்கும் வரவிலக்கணமும் இங்கே இவர்கள் கொடுக்கும் வரைவிலக்கணமும் வித்தியாசமாக உள்ளது.

எனவே இந்த பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தினை நாங்கள் முழுமையாக எதிர்க்கின்றோம் வரும் வாரம் பாராளுமன்றத்தில் கொண்டுவரப்பட உள்ள இந்த சட்டத்தை முழுமையாக எதிர்ப்பதோடு பாராளுமன்ற உறுப்பினர்களும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இதனை கொண்டு வருவதற்குரிய எதிர்ப்பினை வெளிப்படுத்த வேண்டும் – எனவும் தெரிவித்தார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
28 1
உலகம்செய்திகள்

ஈரான் நிபந்தனையின்றி சரணடைய வேண்டும்: அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் திட்டவட்டம்!

மத்திய கிழக்கில் ஈரான் உடனான மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், அந்த நாட்டுடன் எவ்வித ஒப்பந்தங்களும் செய்துகொள்ளப்பட...

27 1
செய்திகள்உலகம்

தெஹ்ரானில் உள்ள ஈரானின் இரகசிய நிலத்தடி பதுங்கு குழி அழிப்பு: இஸ்ரேலிய இராணுவம் தாக்குதல்!

ஈரானின் தலைநகர் தெஹ்ரானின் மையப்பகுதியில், ஈரானின் முன்னாள் உயர்மட்டத் தலைவரான அலி கமேனிக்காக உருவாக்கப்பட்டிருந்த பிரம்மாண்டமான...

26 2
செய்திகள்உலகம்

இந்தியப் பெருங்கடலில் ஈரானியக் கப்பல்கள்: இந்தியாவிலும் இலங்கையிலும் தஞ்சம், அமெரிக்காவுடனான மோதலில் திருப்பம்!

இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் ஈரானியக் கடற்படைக்குச் சொந்தமான மூன்று போர்க்கப்பல்கள் ஒரே காலப்பகுதியில் சிக்கலுக்கு உள்ளாகியுள்ள...

25 2
செய்திகள்உலகம்

ஜெப்ரி எப்ஸ்டீன் கோப்புகள்: டொனால்ட் ட்ரம்ப் தொடர்பான விடுபட்ட FBI ஆவணங்களை வெளியிட்டது அமெரிக்க நீதித்துறை!

ஜெப்ரி எப்ஸ்டீன் தொடர்பான ஆவணங்களின் ஆரம்பகட்ட வெளியீட்டில் விடுபட்டிருந்த, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மீதான...