FB IMG 1681704167366
இலங்கைஉலகம்செய்திகள்

பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் பழைமையான சிலைகள் கண்டுபிடிப்பு!

Share

பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் பழைமையான சிலைகள் கண்டுபிடிப்பு!

தமிழகத்தின் சீர்காழியில் ஆயிரம் ஆண்டுகள் பழைமை வாய்ந்த சிலைகள் மற்றும் தமிழ் எழுத்தில் தேவாரம் எழுதப்பட்ட செப்பு தகடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

மயிலாடுதுறை தருமை ஆதீனத்திற்கு சொந்தமான சீர்காழி சட்டநாதர் கோவில்.இங்கு தோண்ட தோண்ட பல ஐம்பொன் சிலைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.மயிலாடுதுறை சீர்காழியில் புகழ்பெற்ற சட்டநாதர் கோவில் உள்ளது.

இந்தக் கோவிலில் 35 ஆண்டுகளுக்கு பிறகு வரும் மே மாதம் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.

கும்பாபிஷேகத்தை முன்னிட்டு யாகசாலை அமைக்கும் பணிகள் நடைபெற்றது. இந்நிலையில், மேற்கு வாசல் கோபுரம் அருகே யாக சாலைக்காக மண் எடுக்கும் பணிகள் நடைபெற்றது.

அப்போது அங்கே 22 ஐம்பொன் சிலைகள், 55 பீடம்,100 க்கும் மேற்பட்ட செப்பேடுகள், பூஜை பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

கண்டெடுக்கப்பட்ட சிலைகள் அனைத்தும் சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டவையாக இருக்கக்கூடும் என தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், சிலைகளின் மதிப்பு பல கோடி இருக்கும் என கூறப்படும் நிலையில், சம்பவ இடத்திற்கு தொல்லியல் துறை அதிகாரிகள் விரைந்துள்ளனர்.

கோவிலில் பல சிலைகள் மற்றும் பூஜை பொருட்கள் கண்டெடுக்கப்பட்ட நிலையில், அதனை பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்வையிட்டு வருகின்றனர்.தமிழகத்தின் சீர்காழியில் ஆயிரம் ஆண்டுகள் பழைமை வாய்ந்த சிலைகள் மற்றும் தமிழ் எழுத்தில் தேவாரம் எழுதப்பட்ட செப்பு தகடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

#world

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...