download 8 1 10
உலகம்செய்திகள்

ஆண்களை விரட்டி அடிக்கும் விநோத திருவிழா!

Share

பெண்களிடம் அடி வாங்குவது ஆண்களுக்கு எந்த வித கோபத்தையோ அல்லது காழ்ப்புனர்சியையோ ஏற்படுத்துவதில்லை. அதற்கு பதிலாக இவ்வாறு பெண்களிடம் அடி வாங்குவதற்கு அவர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைகிறார்கள்.

ஜோத்பூரில் வருடத்திற்கு ஒருமுறை திங்கா கவர் என்ற திருவிழா வருடத்திற்கு ஒரு முறை கொண்டாடப்பட்டு வருகிறது. வெகு விமரிசையாக நடக்கும் இந்த திருவிழாவின் மூலம் பெண்களின் வாழ்க்கை மேம்படுவதாகவும், சமூகத்தில் பெண்களுக்கென்று அதிகாரம் அளிக்கப்படுவதாகவும் பகுதி மக்கள் நம்புகின்றனர். இந்தத் திருவிழாவின் போது இங்கிருக்கும் எந்த ஒரு பெண்ணும், அந்த நகரத்தில் எங்கு வேண்டுமானாலும் சென்று அவர்கள் கண்ணில் படும் ஆண்களை எல்லாம் அடித்து நொங்கு எடுத்து விடுவார்கள்.

ஆனால் இவ்வாறு பெண்களிடம் அடி வாங்குவது ஆண்களுக்கு எந்த வித கோபத்தையோ அல்லது காழ்ப்புனர்சியையோ ஏற்படுத்துவதில்லை. அதற்கு பதிலாக இவ்வாறு பெண்களிடம் அடி வாங்குவதற்கு அவர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைகிறார்கள். வரலாற்றுக் காலத்தில் இருந்து திங்கா கவர் என அழைக்கப்படும் இந்த திருவிழாவின் போது அங்கு வசிக்கும் பெண்களுக்கு முழு அதிகாரமும் அளிக்கப்படுகிறது.

இந்த திருவிழாவின் போது இரவு 10 மணிக்கு மேல் ஜோத்பூரில் உள்ள பெண்கள் அனைவரும் வெவ்வேறு விதமான உடைகளில் தெருக்களில் இறங்கி அவர்கள் கண்ணில் படும் அனைத்து ஆண்களையும் அடிப்பார்களாம். அவ்வாறு அடி வாங்கும் ஆண்களில் மருத்துவர்கள், ராணுவ வீரர்கள், காவலர்கள் என பாரபட்சமில்லாமல் அனைவருக்கும் அடி விழும்.

குறிப்பாக திருமணமாகாமல் இருக்கும் இளைஞர்களுக்கு மிகவும் சிறப்பு வாய்ந்த ஒரு திருவிழாவாக இது நம்பப்படுகிறது. இவ்வாறு பெண்களிடம் அடி வாங்குவதன் மூலம் விரைவிலேயே தங்களுக்கு திருமணம் நடைபெறும் என்பது இவர்களது நம்பிக்கை. இதற்காகவே நாடு முழுவதும் வெகு தொலைவில் இருந்து பலர் இங்கு அடி வாங்க வருகிறார்கள்.

இந்த திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுவதற்கு மற்றொரு காரணமும் உண்டு. தங்களது கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை உலகிற்கு எடுத்துக்காட்டும் வண்ணமாகவும், பெண்கள் முன்னேற்றத்தை ஊக்குவிக்கும் வகையிலும் இந்த திருவிழா கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு வருடமும் சித்திரை மாதத்தின் சுக்ல பக்ஷாவின் மூன்றாவது நாளில் இத்திருவிழா கொண்டாடப்படுகிறது.

இந்த திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுவதற்கு மற்றொரு காரணமும் உண்டு. தங்களது கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை உலகிற்கு எடுத்துக்காட்டும் வண்ணமாகவும், பெண்கள் முன்னேற்றத்தை ஊக்குவிக்கும் வகையிலும் இந்த திருவிழா கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு வருடமும் சித்திரை மாதத்தின் சுக்ல பக்ஷாவின் மூன்றாவது நாளில் இத்திருவிழா கொண்டாடப்படுகிறது.

திருமணமாகாத பெண்கள் மட்டுமின்றி கணவனை இழந்த பெண்களும் தங்களது மன மகிழ்ச்சிக்காகவும் குடும்பத்தில் நிம்மதிக்காகவும் இந்த திருவிழாவில் கலந்து கொள்கின்றனர். திருமணமான பெண்கள் தங்களது கணவரின் நீண்ட காலம் ஆரோக்கியத்திற்காகவும் திருமணமாகாத பெண்கள் விரைவில் நல்ல மணமகனை பெறுவதற்காகவும் இதில் கலந்து கொள்கிறார்கள்.

இதைத் தவிர இந்த திருவிழாவிற்கான புராண கதையும் ஒன்று உண்டு. இன்றைய தினத்தில் பார்வதி தேவி தன்னை பலவாறு அழகுபடுத்தி கொண்டு சிவபெருமானிடம் வேண்டிக் கொண்டதாகவும், பார்வதி தேவியின் விதவிதமான அழகை கண்ட சிவபெருமான் பார்வதி தேவியை தன்னுடன் அழைத்துச் சென்றதாகவும் ஒரு கதை உண்டு.

இதன் காரணமாக பண்டைய காலத்தில் இருந்து திங்கா கவர் எனப்படும் இந்த திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. இதில் திங்கா என்ற வார்த்தை மோசடி என்பதையும், கவர் என்ற வார்த்தை பார்வதி தேவியையும் குறிக்கிறது. இந்த திருவிழாவை சிறப்பாக கொண்டாடுவதற்காக பத்து நாட்கள் முன்னரே இப்பகுதி மக்கள் தயாராகிறார்கள்.

மேலும் இந்த திருவிழாவின் போது கவர் சிலையானது நகரத்தின் பல்வேறு பகுதிகளில் அலங்கரிக்கப்படுகிறது. 4.8 கிலோ தங்கத்தால் செய்யப்பட்ட சிலை ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட ஒரு கோடி ரூபாய்க்கும் மேல் இதன் மதிப்பு இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

#world

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Murder Recovered Recovered Recovered 19
இலங்கைசெய்திகள்

கஹவத்தையில் கடும் பதற்றம்! பொதுமக்கள் மீது கண்ணீர் புகைத் தாக்குதல் நடத்தும் பொலிஸார்

கஹவத்தையில் பொலிஸார் மற்றும் பொதுமக்களுக்கு இடையில் ஏற்பட்ட குழப்பநிலை காரணமாக அங்கு கடும் பதற்றமான சூழல்...

Murder Recovered Recovered Recovered 17
இலங்கைசெய்திகள்

எமக்கு தொடர்பில்லை! செம்மணி அவலத்தில் இருந்து பொறுப்பு துறக்கும் அமைச்சர்

செம்மணி புதைகுழி சம்பவங்களுக்கும் தனது கட்சிக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம்...

9
சினிமாசெய்திகள்

பிக்பாஸ் புகழ் ஷாரிக்கிற்கு குழந்தை பிறந்தது.. அவரே வெளியிட்ட குழந்தையின் வீடியோ

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்தவர்கள் உமா ரியாஸ் மற்றும் ரியாஸ் கான் ஜோடி....

8
சினிமாசெய்திகள்

சிவகார்த்திகேயனுடன் மோதும் முன்னணி நடிகர்.. பிரம்மாண்டமாக ஒரே நாளில் வெளியாகும் இரண்டு படங்கள்

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் மதராஸி. இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன்...