20230416 071352 scaled
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

செல்வச்சந்நிதி அருகே கிறிஸ்தவ சபை கட்டடம் – வலுக்கும் எதிர்ப்பு!!

Share

வரலாற்றுச் சிறப்புமிக்க தொண்டைமானாறு ஸ்ரீ செல்வச்சந்நிதி ஆலயத்துக்கு அண்மையாக கிறிஸ்தவ சபை ஒன்றினால் அமைக்கப்படும் கட்டடம் தொடர்பில் பல தரப்பட்டவர்களினால் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஒரு வருடத்துக்கு முன்பாக மேற்படி கட்டடம் அமைக்கும் பணி ஆரம்பிக்கப்பட்ட போதே அதனை அமைப்பதற்கான அனுமதியை இரத்துச் செய்யுமாறு செல்வச்சந்நிதி ஆலய நிர்வாகம் கோப்பாய் பிரதேச செயலாளரிடம் எழுத்துமூலம் கோரியிருந்தது.

அத்துடன், வலி.கிழக்கு பிரதேச சபையின் மாதாந்தக் கூட்டத்திலும் செல்வச்சந்நிதி ஆலயத்துக்கு அண்மையாக அனுமதி பெற்றுக்கொள்ளாது மதத்தைப் பரப்பும் நோக்கோடு கட்டடம் ஒன்று அமைவதாகவும் அது தொடர்பில் சபை முறையான நடவடிக்கையை மேற்கொள்ளவேண்டும் என்றும் பிரதேச சபை உறுப்பினர் இ.ஐங்கரன் கேட்டிருந்தார்.

“சமூக அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையிலான இந்தச் செயற்பாடு தடுக்கப்படவேண்டும் எனவும் கட்டட அனுமதிக்கு விண்ணப்பம் கோரப்பட்டதா? என்பதன் ஊடாக அதனை அணுகுவது சிறந்தது எனவும் வலி.கிழக்கு பிரதேச சபையின் அப்போதைய தவிசாளர் நிரோஷ் சபைக்கு தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் குறித்த கிறிஸ்தவ சபையினால் கட்டடம் அமைக்கும் பணி நிறைவு பெற்று வருகின்றது.

அந்தப் பிரதேசத்தில் வாழும் இந்துக்களும் கிறிஸ்தவர்களும் குழப்பமின்றி வாழ்வதற்கு அந்த இடத்தில் கட்டடத்தை அமைப்பதைத் தடுக்குமாறே செல்வச்சந்நிதி ஆலய நிர்வாகம் கோப்பாய் பிரதேச செயலாளரிடம் கேட்டிருந்தது.

எந்தவொரு தரப்பினரும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று செல்வச்சந்நிதி நிர்வாகம் தனது விசனத்தை வெளியிட்டுள்ளது.

இதேவேளை, கிறிஸ்தவ சபை கட்டடம் அமைப்பதற்கு வலி.கிழக்கு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் அனுமதி வழங்கியுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. எனினும் அதுதொடர்பான உத்தியோகபூர்வ தகவலைப் பெற முடியவில்லை.

அண்மைய நாள்களாக மதமாற்ற அமைப்புகள் தொடர்பில் பல்வேறு குழப்பமான சம்பவங்கள் இடம்பெற்று வரும் நிலையில் சம்பந்தப்பட்ட தரப்புகள் இந்த விடயத்தில் உரிய கரிசனை கொண்டு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...