download 4 1 8
சினிமாபொழுதுபோக்கு

பார்டிக்கு போன நடிகைக்கு நடந்த அதிர்ச்சி!

Share

‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’, ‘தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்’, ‘மிஸ்டர் லோக்கல்’ போன்ற படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் ஷாலு ஷம்மு.

இவர் இரண்டு மாதங்களுக்கு முன்பு ரூ.2 லட்சம் மதிப்புள்ள ஐ போன் ஒன்று வாங்கியுள்ளார். கடந்த 9-ஆம் தேதி இரவு சென்னை எம்.ஆர்.சி நகரில் உள்ள நட்சத்திர விடுதியில் ஷாலு ஷம்மு நண்பர்களுடன் விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார்.

பின்னர் நிகழ்ச்சி முடிந்து சூளைமேட்டில் உள்ள அவரது நண்பர் வீட்டில் தங்கியுள்ளார். அடுத்த நாள் எழுந்து பார்க்கும் போது செல்போன் காணாமல் போனதை அறிந்த ஷாலு ஷம்மு நட்சத்திர விடுதிக்கு சென்று தேடியும் கிடைக்காததால் இது தொடர்பாக பட்டினபாக்கம் காவல் நிலையத்தில் அவர் புகாரளித்தார்.

மேலும், ஐபோன் காணாமல் போன விவகாரத்தில் தன்னுடன் இருந்த நண்பர்கள் மீது சந்தேகம் இருப்பதாக கூறியதையடுத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
#cinema

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 152
சினிமாபொழுதுபோக்கு

‘ஜனநாயகன்’ படக் கசிவு: தென்னிந்திய நடிகர் சங்கம் கடும் கண்டனம்!

நடிகர் விஜய்யின் ‘ஜனநாயகன்’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் முன்பே இணையத்தில் சட்டவிரோதமாகக் கசிந்ததற்குத் தென்னிந்திய நடிகர்...

world 148
பொழுதுபோக்குசினிமா

யூடியூபில் 10 கோடி பார்வைகளைக் கடந்த ‘முட்ட கலக்கி’ பாடல்: ‘யூத்’ படத்தின் அசுர வசூல் சாதனை!

நடிகர் கென் கருணாஸ் இயக்கி, கதாநாயகனாக நடித்த ‘யூத்’ (Youth) திரைப்படம் வசூலில் சாதனை படைத்து...

world 137
சினிமாபொழுதுபோக்கு

விஜய்யின் ‘ஜனநாயகன்’ படம் இணையத்தில் கசிவு: 6 பேர் கைது – சைபர் க்ரைம் அதிரடி!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், முன்னணி நடிகருமான விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் இணையதளங்களில் சட்டவிரோதமாகக்...

world 104
சினிமாபொழுதுபோக்கு

பின்னணிப் பாடகி ஆஷா போஸ்லே காலமானார்: இந்திய இசையுலகில் ஒரு சகாப்தம் நிறைவு!

இந்தியத் திரையுலகின் ஈடுஇணையற்ற குரல்களில் ஒன்றான புகழ்பெற்ற பின்னணிப் பாடகி ஆஷா போஸ்லே (92), மாரடைப்பு...