image 7e73d7c0a6
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

திருமலை கடலில் மிதக்கும் திரவ படலம்!!

Share

திருகோணமலை உப்புவௌி தொடக்கம் நிலாவௌி வரையான கடற்பரப்பில் தார் போன்ற திரவ படலம் மிதப்பதன் காரணமாக ​நேற்று (12) முதல் கடற்றொழிலுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

அதன் மாதிரிகள் சேகரிக்கப்பட்டுள்ளதாக கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்தது.

சேகரிக்கப்பட்ட மாதிரிகள் கொழும்பிலுள்ள விசேட ஆய்வுக்கூட பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்படவுள்ளதாக அதிகார சபை தெரிவித்தது.

திருகோணமலை கடலை அண்மித்த பகுதியில் பயணித்த கப்பலில் இருந்து கறுப்புத் துகள்கள் வெளியேறியிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில், திருகோணமலை துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டிருந்த கப்பலை சோதனையிட்டதாக கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகார சபை குறிப்பிட்டது.

கப்பலில் இருந்தும் சில மாதிரிகள் சேகரிக்கப்பட்டதாக அதிகார சபை கூறியது.

கப்பலில் இருந்து கழிவுகள் வெளியேறியிருந்தால், அதற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகார சபை சுட்டிக்காட்டியது.

இதேவேளை, திருகோணமலை மற்றும் அதனை சூழவுள்ள கடற்பரப்பை சுத்தப்படுத்தும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
images 8 5
செய்திகள்இலங்கைஉலகம்

ஈரானில் வெடித்தது பண மதிப்பிழப்புப் போராட்டம்: மத்திய வங்கி ஆளுநர் பதவி விலகல்!

ஈரானிய ரியால் நாணயத்தின் மதிப்பு அமெரிக்க டொலருக்கு நிகராக வரலாறு காணாத வீழ்ச்சியைச் சந்தித்துள்ளதைத் தொடர்ந்து,...

New Project 198
செய்திகள்அரசியல்இலங்கை

கொழும்பு மாநகர சபையில் 15 கால ஊழல்: ஜனாதிபதியால் விசேட விசாரணை ஆணைக்குழு நியமனம்!

கொழும்பு மாநகர சபையில் (CMC) கடந்த 15 ஆண்டுகளாக இடம்பெற்றதாகக் கூறப்படும் பாரிய நிதி ஊழல்கள்...

Johnston Fernandos Son Johan Fernando Arrested
இலங்கைஅரசியல்செய்திகள்

தலைமறைவானார் ஜோன்ஸ்டன்? கைது செய்ய 5 பொலிஸ் குழுக்கள் தேடுதல்! மகன் ஜொஹன் கைது.

சதோச (Sathosa) நிறுவனத்திற்குச் சொந்தமான வாகனங்களைத் தவறாகப் பயன்படுத்தியமை மற்றும் அரச நிதியைத் துஷ்பிரயோகம் செய்தமை...

dead 300x200 1
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

தாளையடி கடலில் அடித்துச் செல்லப்பட்ட உதைப்பந்தாட்ட வீரர்: இரண்டு நாட்களின் பின் சடலமாகக் கரையொதுங்கினார்!

யாழ்ப்பாணம் தாளையடி கடலில் நீராடச் சென்ற நிலையில் அலையில் அடித்துச் செல்லப்பட்ட இளைஞர், இரண்டு நாட்களாக...