IMG 20230411 WA0094
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

சாவகச்சேரி புத்தூர்ச் சந்தியில் ஒருவர் குத்திக் கொலை!

Share

யாழ். சாவகச்சேரி மீசாலை புத்தூர் சந்திப் பகுதியில் நோயாளர் நலன்புரிச் சங்க பராமரிப்பாளர் ஒருவர் அலவாங்கால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் நேற்று பிற்பகல் 4.30 மணியளவில் இடம் பெற்றுள்ளதாக சாவகச்சேரி தெரிவித்தனர்.

இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது,

மீசாலை புத்தூர் சந்திப் பகுதியில் வசித்துவரும் 20 வயதான இளைஞர் ஒருவர் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் மனநல சிகிச்சைக்காக கடந்த செவ்வாய்க்கிழமை அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில் நேற்றுமுன்தினம்(10) குறித்த இளைஞர் வைத்தியசாலையில் இருந்து தப்பி ஓடி புத்தூர் சந்தியிலுள்ள தனது வீட்டுக்கு வந்துள்ளார்.

இதனால், தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் இளைஞரைப் பராமரித்துவந்த நோயாளர் நலன்புரிச் சங்கத்தைச் சேர்ந்த நி.நாகச்செல்வன் என்பவரும், இளைஞரின் உறவினர் ஒருவருமாக இளைஞரை மீண்டும் வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்வதற்காக வந்திருந்தனர்.

அப்போது, புகையிரதக் கடவையில் அமர்ந்திருந்த குறித்த இளைஞரோடு நோயாளர் நலன்புரிச்சங்க பராமரிப்பாளர் உரையாடியதோடு, இளைஞரின் வீட்டுக்கும் அவரோடு சென்றுள்ளார்.

இதன்போது இளைஞரின் உறவினர் முச்சக்கர வண்டியோடு வீதியோரத்தில் காத்திருந்தார்.

இந்நிலையில் வீட்டுக்குள் இருந்து இளைஞர் மட்டும் வெளியே வந்து மீண்டும் புகையிரதக் கடவையில் அமர்ந்து கொண்டார்.

வீட்டுக்குள் சென்ற நோயாளர் நலன்புரிச் சங்க பராமரிப்பாளரை காணாத இளைஞரின் உறவினர் அவரது தொலைபேசிக்கு அழைப்பெடுத்தார்.

நீண்ட நேரமாக அழைத்தும் பதில் கிடைக்காத்தால், புகையிரத வீதியில் அமர்ந்திருந்த இளைஞரிடம் சென்று வினவியுள்ளார்.

இதன்போது, “பராமரிப்பாளரை வீட்டு முற்றத்தில் வைத்து அலவாங்கால் குத்தி கொலை செய்துவிட்டேன்” என இளைஞர் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து வீட்டு முற்றத்திற்கு சென்று பார்த்தபோது குறித்த நலன்புரிச் சங்க பராமரிப்பாளர் முகத்தில் பலத்த காயங்களோடு சடலமாகக் கிடந்துள்ளார்.

இதையடுத்து சாவகச்சேரி பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் இளைஞரை கைது செய்துள்ளனர்.

சடலமாக மீட்க்கப்பட்டவர் ஆனைக்கோட்டை தெற்கு கூழாவடியைச் சேர்ந்த குடும்பஸ்தரான நி.நாகச்செல்வன் என ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
images 4
செய்திகள்அரசியல்இலங்கை

ரணில் – நாமல் புதிய கூட்டணி? ஐக்கிய மக்கள் சக்தியுடனான பேச்சு முறிந்தால் மாற்றுத் திட்டத்திற்கு தயார்!

ஐக்கிய தேசியக் கட்சி (UNP) மற்றும் சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி (SJB)...

26 69807748e747c
செய்திகள்உலகம்

மேற்குக் கரையில் தீவிரமடையும் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு: பூர்வீக நிலங்களிலிருந்து பலஸ்தீனியர்கள் வெளியேற்றம்!

இஸ்ரேலால் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில், பலஸ்தீனியர்களை அவர்களது பூர்வீக நிலங்களில் இருந்து வெளியேற்றும் நடவடிக்கைகளை இஸ்ரேல்...

articles2FUBt74sYE7LHAHmjLFnpe
செய்திகள்அரசியல்இலங்கை

சிஐடி முன் பிரசன்ன ரணதுங்க: அரசு தனது தோல்விகளை மறைக்கவே எங்களை அழைக்கிறது!

திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் ‘கெஹெல்பத்தர பத்மே’ என்பவருடனான தொடர்பு குறித்து வாக்குமூலம் அளிப்பதற்காக, முன்னாள் அமைச்சர்...

image eae410f15d
செய்திகள்அரசியல்இலங்கை

NPP உறுப்பினர் ஜகத் மனுவர்ணவை கைது செய்ய உத்தரவு: கோட்டை நீதவான் நீதிமன்றம் பிடியாணை!

தேசிய மக்கள் சக்தியின் (NPP) நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் மனுவர்ணவை உடனடியாகக் கைது செய்து நீதிமன்றத்தில்...