gQWzvbXUS4ts6gpiEoZO
இலங்கைசெய்திகள்

வெளிநாடு செல்ல முற்பட்ட நான்கு தமிழர் அதிரடி கைது!

Share

கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிட்டிருந்த கப்பலொன்றில் மறைந்திருந்து நாட்டை விட்டு தப்பிச் செல்ல முயன்ற நால்வரை துறைமுக பொலிஸார் கைது செய்துள்ளனர்.வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த நால்வரே கைது செய்யப்பட்டவர்களாவர்.

25, 31 மற்றும் 32 வயதுடைய இருவர் என நால்வர் உள்ளடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
யாழ்ப்பாணம் வேலணை, தொண்டமானாறு, புதுக்குடியிருப்பு மற்றும் அராலி வடக்கு ஆகிய பகுதிகளில் வசிப்பவர்கள் இவர்கள் என தெரியவருகிறது.

கடந்த மார்ச் மாதம் 24ஆம் திகதி கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிட்டிருந்த கப்பலில் ஏறி சந்தேகநபர்கள் குழு மறைந்திருந்துள்ளது. பின்னர் கப்பல் பயணிக்கத் தொடங்கிய நிலையில் கப்பலின் கப்டன், சூயஸ் கால்வாய் அருகே இந்த சந்தேக நபர்களை கவனித்துள்ளார்.

பின்னர் கப்பலின் கப்டன் கப்பல் நிறுவனத்திற்கு அறிவித்து சந்தேக நபர்களை இலங்கைக்கு நாடு கடத்த தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார்.

#srilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Featuredvdfv
இலங்கை

ஆபத்தான ஆயுதங்களுடன் இரத்மலானையில் பலர் கைது!

இரத்மலானை கொனா கோவில பகுதியில் 3 வாள்கள், 1 கோடரி, 3 கத்திகள் மற்றும் உள்நாட்டில்...

dead body 2
இலங்கை

தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட இளைஞர்!

இன்றைய தினம், யாழ்ப்பாணம் – நாரந்தனை பகுதியில் இளைஞர் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக...

bus bike accident
இலங்கை

சற்று முன்னர் இடம்பெற்ற கோர விபத்து – பலியான வங்கி ஊழியர்!

அனுராதபுரம் – பாதெனிய வீதியில் மோட்டார் சைக்கிளும் தனியார் பேருந்தும் மோதி ஏற்பட்ட கோர விபத்தில்,...

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் ஒப்புதலுக்கு அமைவாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள்
இலங்கை

உயர் அதிகாரிகளுக்கு திடீரென வழங்கப்பட்ட இடமாற்றங்கள்.

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் ஒப்புதலுக்கு அமைவாக, சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் பலருக்கு இடமாற்றங்களை வழங்க பொலிஸ்...