அரசியல்இலங்கைசெய்திகள்

நிதி இல்லாவிடின் கட்டம் கட்டமாக தேர்தல்களை நடத்த வேண்டும்!!

20230409 101654 scaled
Share

அரசாங்கத்திடம் நிதி இல்லாவிடின் கட்டம் கட்டமாக படிப்படியாக தேர்தல்களை நடத்த முன்வர வேண்டும் என வடக்கு மாகாண சபையின் அவை தலைவர் சி.வீ.கே.சிவஞானம் கோரிக்கை விடுத்தார்.

யாழ்ப்பாணத்தில் இன்று இடம் பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போது இதனை தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்,

உள்ளூராட்சி சபை தேர்தல் மாகாண சபை தேர்தல் என்பன நடாத்தப்பட வேண்டும். கடந்த காலங்களில் கட்டம் கட்டமாக படிப்படியாக தேர்தல் இடம்பெற்ற வரலாறுகள் உண்டு. இந்த நிலையில் அரசாங்கம் பணம் இல்லை என காலத்தை இழுத்தடிக்காமல் கட்டம் கட்டமாக தேர்தலை நடத்த முன்வர வேண்டும்.

நாடளாவிய ரீதியில் ஆளுநர்களின் அதிகாரம் தலையீடுகள் அதிகரித்துள்ள நிலையில் வடக்கில் அது அச்சுறுத்தல் பாணியில் நகர்கின்ற நிலையே காணப்படுகின்றது. வடக்கு ஆளுநர் அச்சுறுத்தும் பாணியில் செயற்பட்டால் நாம் சட்டரீதியாக செயற்படுவோம்.

ஜனாதிபதி தேர்தல் நடக்கும் என ஊடகங்களும் அரசியல் அவதானிகளும் கூறுவது முழுமையாக தவறானது. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னர் இருந்த கோட்டாபய ராஜபக்ஷவின் எஞ்சிய இடைக்காலத்துக்கே பதவியில் இருக்க முடியுமே தவிர முன்னதாகவே தேர்தலை நடத்துவதற்கு உரிமை கிடையாது. இது அரசியலமைப்பில் தெளிவாக காணப்படுகிறது.

ஏனைய ஜனாதிபதிக்கு இருக்கின்றது போல நான்கு வருடங்களுக்கு பின்னர் தேர்தலை நடாத்துவதற்கான அதிகாரம் இடைக்கால ஜனாதிபதிக்கு கிடையாது. தேர்தலை முன்னதாகவே நடத்த வேண்டுமாக இருந்தால் அரசியலமைப்பில் மாற்றத்தை கொண்டு வர வேண்டும் அதன் பின்னரையே தேர்தலை நடத்த முடியும் – என்றார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Related Articles
15 7
இலங்கைசெய்திகள்

தமிழரசின் பெருவெற்றி – நான் கூறியது நடந்து விட்டது….! மார்தட்டும் சுமந்திரன்

அன்று நான் கூறியது இன்று நிரூபணமாகியுள்ளது என இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளரான ஜனாதிபதி...

16 7
உலகம்செய்திகள்

ஹவுதிகளுக்கு பேரிழப்பு : யேமனின் முக்கிய விமான நிலையத்தை தகர்த்து அழித்தது இஸ்ரேல்

யேமனின் தலைநகரிலுள்ள சர்வதேச விமான நிலையத்தை வான்வழித் தாக்குதல்கள் மூலம் தகர்த்து அழித்துள்ளதாக இஸ்ரேல் இராணுவம்...

13 7
இலங்கைசெய்திகள்

நான் கூறியதை கேட்டிருந்தால் வெற்றி – ரணில் விக்ரமசிங்க

எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து சபைகளில் கூட்டணியாக போட்டியிட்டிருந்தால் ஐம்பது முதல் நூறு எண்ணிக்கையிலான இடங்களை வென்றிருக்க முடியும்...

12 7
இலங்கைசெய்திகள்

பல்கலைகளில் தொடரும் அடாவடித்தனம் : ஆறு மாணவர்கள் அதிரடியாக கைது

சக மாணவர் ஒருவரைத் தாக்கிய குற்றச்சாட்டில் ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலையை (University of Sri Jayewardenepura)...