சாவகச்சேரியில் குற்றச் செயலில் ஈடுபட்ட ஒருவர் லஞ்சமாக கொடுத்த ஐம்பதாயிரம் ரூபாய் பணத்தினை பெற மறுத்து தன் கடமையை சரிவர புரிந்த சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தருக்கு சன்மானம் வழங்கப்பட உள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் தெரிவித்தார்.
நேற்றிரவு யாழ்ப்பாணத்தில் இருந்து சட்டவிரோதமாக கடத்துச் செல்லப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட ஆடுகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் கைது செய்யப்பட்டவர் கடமையில் இருந்த பொலிஸ் சாஜனுக்கு 50 ஆயிரம் ரூபா பணத்தினை லஞ்சமாக வழங்கி தப்பிக்க முற்பட்டுள்ளார்.
இதன்போது குற்றச்செயலுன் தொடர்புடையவர் லஞ்சமாக கொடுத்த பணத்தினை வாங்க மறுத்த சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் சாஜன் தர பொலிஸ் உத்தியோகத்தருக்கு மதிப்பளித்து சன்மானம் வழங்கப்பட உள்ளதாகவும் தெரிவித்தார்.
#SriLankaNews
Leave a comment