internayakke
இலங்கைசெய்திகள்

கட்டுநாயக்க விமான சேவைகள் பாதிப்பு!!

Share

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தைச் சுற்றியுள்ள மோசமான வானிலை காரணமாக பல விமானங்கள் தாமதமாகியுள்ளன.

நேற்று (07) மாலை 6.25 மணியளவில் துபாய்க்கு செல்லவிருந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் யூ. எல். 225 என்ற விமானம் சுமார் 15 மணி நேர தாமதத்திற்குப் பிறகு காலை 9.15 மணியளவில் புறப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

நேற்று இரவு சுமார் 7.15 மணியளவில் ஜப்பானின் நரிட்டா நகருக்குச் செல்லவிருந்த ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் யு. எல். 454 என்ற விமானம் இன்று அதிகாலை 1.50 மணிக்கு புறப்பட்டதாக தெரண விமான நிலைய செய்தியாளர் தெரிவித்தார்.

அத்துடன், கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாக நேற்று இரவு 11.40 மணியளவில் இந்தியாவின் மும்பைக்கு செல்லவிருந்த ஸ்ரீலங்கன் விமான சேவையின் யு.எல். 141 விமானம் ரத்து செய்யப்பட்டுள்ளதுடன், மும்பையிலிருந்து இன்று காலை 05.35க்கு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடையவிருந்த விமானமும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

மேலும், சீனாவின் ஷாங்காய் நகரில் இருந்து நேற்று இரவு 07.00 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்க வந்த சைனா ஈஸ்டன் ஏர்லைன்ஸ் விமானம் MU-231, கட்டுநாயக்க விமான நிலையத்தை சுற்றி பெய்த கடும் மழை காரணமாக மாலைதீவின் மாலே விமான நிலையத்திற்கு திருப்பி விடப்பட்டது.

நேற்று மாலை 06.10க்கு குவைத்தில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடையவிருந்த ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானம் UL-230 தாமதமாகி இன்று காலை 07.33க்கு மத்தள விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டதாக செய்தியாளர் தெரிவித்தார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...