1635812679 weather rain new 2 1
இலங்கைசெய்திகள்

மழைக்கு வாய்ப்பு!!

Share

மேல், சப்ரகமுவ, தெற்கு, ஊவா, மத்திய, வடமேற்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் மன்னார் மாவட்டத்திலும் மாலை அல்லது இரவு வேளைகளில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடிய சாத்தியம் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதேவேளை சில இடங்களில் 50 மில்லிமீற்றருக்கும் அதிகமாக கனமழை பெய்யக்கூடிய சாத்தியம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேல் மற்றும் தென் மாகாணங்களில் காலை வேளையில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும் எனவும் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அத்துடன், இடியுடன் கூடிய மழை பெய்யும் தருணங்களில் பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்கள் ஏற்படக்கூடும்.

சூரியன் வடக்கு நோக்கிப் பயணிப்பதால், ஏப்ரல் 05 முதல் 15 வரை இலங்கையின் அட்சரேகைகளுக்கு நேர் மேலே உள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதன் காரணமாக, இன்று (08) நண்பகல் 12:12 அளவில் பெம்முல்ல, திஹாரிய, புபுரஸ்ஸ, தெரிபெஹெ, வடினாகல மற்றும் திருக்கோவில் ஆகிய பகுதிகளுக்கு சூரியன் உச்சம் கொடுக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
vagi 1
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

வார இறுதியில் நுவரெலியா – யாழ்ப்பாண மரக்கறி விலைகள்: போஞ்சி கிலோ ரூ. 800!

வார இறுதி நாளான இன்று பொருளாதார மத்திய நிலையங்களில் மரக்கறிகள் விற்பனை செய்யப்பட்டுள்ள விலைப்பட்டியல்கள் வெளியாகியுள்ளன....

1637156252 Damgates 2
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

கந்தளாய் குளத்தின் 4 வான்கதவுகள் திறப்பு: வினாடிக்கு 750 கன அடி நீர் வெளியேற்றம்!

கந்தளாய் பகுதியில் தொடர்ந்து பெய்து வரும் கடும் மழை காரணமாக, கந்தளாய் குளத்தின் நீர் மட்டம்...

25 688e9a504bdbd
அரசியல்இலங்கைசெய்திகள்

கல்விச் சுமை குறைப்பு, மனநலனுக்கு முன்னுரிமை: நுவரெலியா கல்வி அதிகாரிகளுடன் பிரதமர் ஹரிணி அமரசூரிய கலந்துரையாடல்!

பேரிடர் நிலைமைக்குப் பின்னர் நுவரெலியா மாவட்டத்தின் மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளை வழமைக்குக் கொண்டுவருவது மற்றும் பாடசாலைகளை...

1529329179 Colombo Fort 2
இலங்கைசெய்திகள்

கொழும்பு துறைமுகத்தில் எண்ணெய்க் கசிவு கட்டுப்பாடு: கடற்படை, கடலோரக் காவல் படையின் துரித நடவடிக்கை!

கொழும்பு துறைமுகத்துக்கு அருகில் உள்ள எரிபொருள் மிதவையில் இன்று காலை (டிசம்பர் 14) ஏற்பட்ட திடீர்...