download 3 1 1
உலகம்செய்திகள்

இந்தியாவில் மீண்டும் சீனாவின் அடாவடித்தனம்!

Share

இந்தியாவின் அருணாசல பிரதேச மாநிலத்தை சீனா தனது நாட்டின் ஒரு பகுதி என்று கூறி சொந்தம் கொண்டாடி வருகிறது. இதற்கு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்தது.

இதனால் இந்தியா-சீனா இடையே எல்லை பிரச்சனை இருக்கிறது. மேலும் இரு நாட்டு ராணுவ வீரர்கள் இடையே மோதலும் ஏற்பட்டது. இந்த நிலையில் இவ்விவகாரத்தில் சீனா மீண்டும் அடாவடியில் ஈடுபட்டுள்ளது.

அருணாசல பிரதேசத்தில் உள்ள 11 இடங்களின் பெயர்களை மாற்றி சீனா அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக சீன, திபெத்திய மற்றும் பின்யின் ஆசிய மொழிகளில் சீனாவின் சீவிஸ் விவகார அமைச்சகம் இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது.

அருணாசல பிரதேசத்தில் உள்ள இரண்டு நிலப்பகுதிகள் இரண்டு குடியிருப்பு பகுதிகள், ஐந்து மலை சிகரங்கள் இரண்டு ஆறுகள் ஆகியவற்றின் பெயர்கள் மற்றும் அவற்றின் கீழ் உள்ள நிர்வாக மாவட்டங்களின் வகையையும் பட்டியலிட்டுள்ளது.

இந்த இடங்கள் திபெத்தின் தெற்கு பகுதியான ஜங்னான் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பெயர் மாற்றம் மக்களுக்கு மிக வசதியாகவும் துல்லியமாக நினைவில் வைத்து கொள்ளவும், அடையாளம் காணவும் உதவும் என்று சீனா தெரிவித்துள்ளது.

மேலும் தெற்கு திபெத்திய பகுதிகளின் அருணாசல பிரதேசத்தின் சில பகுதிகள் இருந்தும் வரை படத்தையும் சீனா வெளியிட்டுள்ளதாக இதில் அருணாசல பிரதேச தலைநகர் இட்ட நகருக்கு அருகில் உள்ள ஒரு நகரமும் அடங்கும்.

அருணாசல பிரதேசத்தில் உள்ள இடங்களுக்கு சீனா பெயர்களை சூட்டுவது இது 3-வது முறையாகும். கடந்த 2017-ம் ஆண்டு 6 இடங்களுக்கு 2021-ம் ஆண்டு 15 இடங்களுக்கு பெயர்களை மாற்றி அறிவித்து இருந்தது.

இதனை நிராகரித்த இந்தியா தனது கடும் எதிர்ப்பையும், கண்டனத்தையும் தெரிவித்து இருந்தது. இந்த நிலையில் தான் அருணாசல பிரதேச விவகாரத்தில் சீனா மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.

#world

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...