202104110956313706 Introduction of Electronic Connection Name Change System SECVPF
இலங்கைசெய்திகள்

மின்கட்டணம் குறைய வாய்ப்பு!

Share

மின்சார கட்டணம் 30% ஆல் குறைக்கப்பட வேண்டும் என பொது பயன்பாட்டு ஆணைக்குழு தவிசாளர் ஜானக ரத்நாயக்க நேற்று தெரிவித்தார்.

மின்சார தேவை குறைந்துள்ளமையைக் கருத்தில் கொண்டு, அமெரிக்க டொலரின் பெறுமதி வீழ்ச்சியடைந்ததுடன் எரிபொருள் விலைகளும் குறைக்கப்பட்டுள்ளதால் அதற்கேற்ப மின் கட்டணமும் குறைக்கப்பட வேண்டும் என நேற்றைய தினம் நடைபெற்ற ஊடகவியலாளர் சநதிப்பில் கலந்து கொண்ட போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.

2022 ஆம் ஆண்டின் முதலாம் காலாண்டுடன் ஒப்பிடுகையில் இவ்வருடத்தில் முதல் மூன்று மாதங்களில் மின்சார தேவை 18% ஆல் குறைந்துள்ளது.  மின்சாரத் தேவை குறைந்துள்ளதால், மின் உற்பத்தி மற்றும் விநியோக செலவும் குறையும்.  ஆகையால், இலங்கை மின்சார சபையினால் இவ்வருடத்திற்காக மதிப்பிடப்பட்ட மின் தேவை மதிப்பீடு தவறானது என்பது தெரிகிறது என்று அவர் தெரிவித்தார்.

பொதுப் பயன்பாடுகள் ஆணையத்தின் மதிப்பீடு சரியானது. ஏனென்றால் குறித்த தேவைக் குறைவால் நாங்கள் 35% கட்டண உயர்வை பரிந்துரை செய்திருந்தோம். ஆனால் இந்த நிலைமையைப் புரிந்து கொள்ளாமல் பெரும்பான்மையான ஆணைய உறுப்பினர்கள், இலங்கை மின்சார சபையால் பரிந்துரைக்கப்பட்ட 60% உயர்வை அங்கீகரித்துள்ளனர்.

இலங்கை மின்சார சபையால் மதிப்பிடப்பட்ட மின் தேவைக்கு மாறாக குறைந்த தேவையே இருக்கிறது. எனவே மின் விநியோகத்திற்கான செலவு குறைக்கப்பட வேண்டும்”, என ரத்நாயக்க தெரிவித்தார்.

நாப்தா எண்ணெய், எரிபொருள், நிலக்கரி மற்றும் டீசல் எண்ணெய்களின் விலை குறைப்பின் நன்மை மக்களுக்கு வழங்கப்பட வேண்டும்  என பொதுப் பயன்பாடுகள் ஆணையத் தவிசாளர் தெரிவித்தார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
35
சினிமாசெய்திகள்

ஸ்வாசிகா யாருடைய DIE HARD FAN தெரியுமா? நேர்காணலில் மனம் திறந்த ஸ்வாசிகா..!

தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஸ்வாசிகா. இவர் பல திரைப்படங்களை நடித்தது...

33 1
சினிமாசெய்திகள்

விசில் போட தயாரா? பூஜையுடன் ஆரம்பமானது ஜீவாவின் 45வது படம்..! வைரலாகும் போட்டோஸ்!

தமிழ் சினிமா வட்டாரத்தில் இன்று ஒரு முக்கியமான தினமாக அமைந்துள்ளது. நடிகர் ஜீவா தனது 45வது...

30
சினிமாசெய்திகள்

மாளவிகா மோகனன் GQ ஷூட்டில் கவர்ச்சிகரமான லுக்…! ரசிகர்கள் மயக்கும் போட்டோஸ்..!

தமிழ் சினிமாவின் ஸ்டைலிஷ் குயின் மாளவிகா மோகனன், மீண்டும் ஒரு முறை சமூக வலைதளங்களை சிலையாய்...

34
சினிமாசெய்திகள்

“லெனின்” படத்தில் இருந்து விலகிய ஸ்ரீலீலா..!படத்தின் ஹீரோயினி யார் தெரியுமா?

பிரபல தெலுங்கு நடிகரும் தயாரிப்பாளருமான நாகார்ஜுனாவின் இளைய மகன் அகில் அக்கினேனி, புது பரிமாணத்துடன் திரையில்...