1 tamil
அரசியல்இலங்கைசெய்திகள்

தமிழ் அரசியல் கைதிகள் மூவர் விடுதலை!

Share

2009 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டு 14 வருடங்களாக சிறைச்சாலையில் வைக்கப்பட்டிருந்த தமிழர்கள் மூவர், வவுனியா மேல் நீதிமன்றத்தால் இன்று (03) விடுதலை செய்யப்பட்டனர்.

2009 ஆம் ஆண்டு மே மாதம் கைது செய்யப்பட்டு தடுப்பு காவலில் இருந்த யாழ் வேலணையை சேர்ந்த இ. திருவருள், யாழ் கரவட்டியை சேர்ந்த ம. சுலக்சன், முள்ளியவளையை சேர்ந்த க. தர்சன் ஆகிய மூவருக்கும் எதிராக வவுனியா மேல் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது.

அவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் நிரூப்பிக்கப்படாத நிலையில், குறித்து மூவரையும் அனைத்து குற்றச்சாட்டுக்களில் இருந்தும் வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி மா. இளஞ்செழியன் விடுவித்து, அவர்களை விடுதலை செய்தார்.

இது தொடர்பாக குறித்த மூன்று அரசியல் கைதிகள் தொடர்பில் மன்றில் ஆஜராகி வழக்கு விசாரணைகளை முன்னெடுத்த சிரேஸ்ட சட்டத்தரணி அன்ரன் புனிதநாயகம் கருத்து தெரிவிக்கையில்,

கடந்த 2009 ஆம் ஆண்டு மே மாதத்தில் இருந்து விளக்கமறியலிலும், தடுப்பு காவலிலும் வைக்கப்பட்டிருந்த மேற்படி மூவரும் வவுனியா மேல் நீதிமன்றத்தினால் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

அரசாங்கத்திற்கு எதிராக சதித் திட்டம் தீட்டிய குற்றம் இவர்களுக்கு எதிராக சாட்டப்பட்டிருந்தது. இவர்கள் ஏற்கெனவே வழங்கிய குற்ற ஒப்புதல் வாக்குமூலம் செல்லுபடியற்றது என நீதிமன்றம் தீர்மானித்தது. அதனைத் தொடர்ந்து சுயாதீன சாட்சிகள் இவர்களுக்கு எதிராக முன்வைக்கப்பட்டன. அந்த சாட்சியங்கள் இவர்களது குற்றத்தை நிரூப்பதற்கு நியாயமான சந்தேகங்களுக்கு அப்பால் நிரூப்பிக்கப்படவில்லை. இதன் காரணமான அனைத்து குற்றங்களிலும் இருந்து இவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளார்கள்.

மிக நீண்டகாலம் இருந்த அரசியல் கைதிகளின் வழக்காக இது காணப்படுகின்றது. இவர்களது விடுதலை எனக்கு மகிழ்ச்சியாக இருக்கின்றது எனத் தெரிவித்தார்.

விடுதலை செய்யப்பட்ட மூவரும் நீதிமன்றம் முன்பாக வருகை தந்திருந்த தமது குடும்பத்தினருடனும், தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் செயலாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரன் அவர்களுடனும் கட்டியணைந்து தமது மகிழ்ச்சியையும், சந்தோசத்தையும் வெளிப்படுத்தியதுடன் தமது விடுதலைக்காக உழைத்த அனைவருக்கும் நன்றி தெரிவித்தனர்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 50
செய்திகள்உலகம்

ஈரான் உடன்படிக்கையை மீறினால் கடும் இராணுவ நடவடிக்கை: ‘ட்ரூத் சோஷியல்’ தளத்தில் டிரம்ப் எச்சரிக்கை!

அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே எட்டப்பட்டுள்ள உடன்படிக்கையைத் தெஹ்ரான் முழுமையாகக் கடைப்பிடிக்கும் வரை, அமெரிக்கப் படைகள் ஈரானைச்...

world 49
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பகல் நேர கடும் வெப்பத்தைத் தொடர்ந்து இடியுடன் கூடிய மழை: பொதுமக்களுக்கு எச்சரிக்கை!

இலங்கையின் பல பகுதிகளில் பகல் நேரங்களில் கடுமையான வெப்பம் நிலவி வரும் சூழலில், பிற்பகல் வேளைகளில்...

world 48
செய்திகள்இலங்கைபிராந்தியம்

எரிபொருள், மின்சார விலைகளில் மாற்றம்? புதிய விலை சூத்திரத்தை அறிமுகம் செய்ய திட்டம்!

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலால் உலகளாவிய ரீதியில் எரிபொருள் விலைகள் உயர்ந்துள்ள நிலையில், உள்நாட்டிலும்...

world 47
செய்திகள்இலங்கைபிராந்தியம்

2.2 பில்லியன் நிலக்கரி கொள்முதல் மோசடி: சட்டமா அதிபர் ஒப்புதலின்றி ஒப்பந்தம் கையெழுத்து!

டிரைடென்ட் கெம்பார் லிமிடெட் (Trident Kembar Ltd) நிறுவனத்திடமிருந்து நிலக்கரி கொள்முதல் செய்ததில் நிகழ்ந்துள்ள பாரிய...