20230401 101405 scaled
அரசியல்இலங்கைசெய்திகள்

அரசுக்கு எதிராக யாழில் மாபெரும் கண்டனப் போராட்டம்!!

Share

வடக்கு கிழக்கில் தமிழர்களின் இருப்பை அழிக்கும் திட்டமிட்ட செயற்பாடுகளைக் கண்டித்தும் அதைத் தடுத்து நிறுத்த வலியுறுத்தியும் மாபெரும் கண்டனப் போராட்டமொன்று இன்று முன்னெடுக்கப்பட்டது.

கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் தலைமையில் யாழ்ப்பாணம் சங்கானைச் சந்தியில் இன்று காலை இப் போராட்டம் நடைபெற்றது.

இதன் போது வெடுக்குநாறி மலை எங்கள் சொத்து, கிண்ணியா எங்கள் சொத்து, நெடுந்தீவு எங்கள் சொத்து, கச்சதீவு எங்கள் சொத்து, அழிக்காதே அழிக்காதே தமிழினத்தை அழிக்காதே, தொல்லியல் திணைக்களமே வெளியேறு, வெளியேறு வெளியேறு படைகளே வெளியேறு, எங்கே எங்கே உறவுகள் எங்கே, தமிழர்களின் தீர்வு சுயாட்சியே, எடுப்பது பிச்சை அறுப்பது எங்களின் கழுத்தையா உள்ளிட்ட பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை ல் தாங்கியவாறு கோசங்களை எழுப்பியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இப் போராட்டத்தில் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள் பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

20230401 102247 20230401 102125 20230401 101204 20230401 101730 20230401 102117

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
20 18
செய்திகள்இலங்கைபிராந்தியம்

காலி சிறைச்சாலைக்குள் போதைப்பொருள் வீசும் முயற்சி முறியடிப்பு: இளைஞர் ஒருவர் கைது!

காலி சிறைச்சாலையின் பாதுகாப்பை மீறி, அதன் மதிலுக்கு மேலால் போதைப்பொருள் மற்றும் தடைசெய்யப்பட்ட பொருட்களை உள்ளே...

19 16
செய்திகள்விளையாட்டு

92 ஆவது “புனிதர்களின் சமர்” கிரிக்கெட் போட்டி: வெற்றியின்றிச் சமநிலையில் நிறைவு!

கொழும்பு புனித ஜோசப் கல்லூரி மற்றும் பம்பலப்பிட்டி புனித பீட்டர்ஸ் கல்லூரி அணிகளுக்கு இடையிலான வரலாற்றுச்...

18 17
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நெலுவ மாதுகெட்ட பகுதியில் கிங் கங்கையில் சடலம் மீட்பு: பொலிஸார் விசாரணை!

காலி மாவட்டம், நெலுவ – மாதுகெட்ட பகுதியில் பாயும் கிங் கங்கையில் (Gin Ganga) மிதந்தவாறு...

17 18
செய்திகள்உலகம்

ஈரானின் நடன்ஸ் அணுசக்தி நிலையம் மீது மீண்டும் தாக்குதல்: சர்வதேச விதிகள் மீறப்பட்டுள்ளதாக ஈரான் குற்றச்சாட்டு!

ஈரானின் மிக முக்கியமான மற்றும் பிரதான அணுசக்தி நிலையங்களில் ஒன்றான நடன்ஸ் (Natanz) மீது மீண்டும்...