Connect with us

இலங்கை

தொல்பொருள் திணைக்களத்தின் உதவியுடனே அதி லிங்கேஸ்வரர் உடைப்பு!

Published

on

charls

வவுனியா – நெடுங்கேணி வெடுக்குநாறி மலையிலிருந்து ஆதி லிங்கேஸ்வரர் ஆலயம் அடித்து நொருக்கப்பட்ட சம்பவம் தொல்பொருள் திணைக்களத்தின் உதவியுடன் இடம்பெற்றுள்ளதாகவும் குறித்த சம்பவத்தை வன்மையாக கண்டிப்பதாக வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்தார்.

மன்னாரில் உள்ள அலுவலகத்தில் இன்று (28) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

கடந்த மூன்று வருடங்களாக வவுனியா மாவட்டத்தில் வவுனியா வடக்கு பிரதேச செயலகத்திற்குட்பட்ட வவுனியா – நெடுங்கேணி வெடுக்குநாறி மலையிலிருந்து ஆதி லிங்கேஸ்வரர்   ஆலயத்திற்கு பக்தர்கள் செல்வதையும்,திருவிழாக்கள் செய்வதையும் தொல்பொருள் திணைக்களம் ஊடாக பொலிஸார் தடை விதித்து இருந்தனர்.

கடந்த 2 வருடங்களுக்கு மேலாக இங்கு திருவிழா செய்ய முடியாமல் இருந்த சூழ்நிலையை நீதிமன்றம் வழங்கியிருந்தது.

அதன் அடிப்படையில் தற்போது மூன்று தினங்களுக்கு முன்பு வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வர ஆலயத்தில் இருக்கும் அனைத்து விக்கினங்களும் உடைத்து எரியப்பட்டுள்ளது. குறித்த நடவடிக்கையானது  படைத்தரப்பினரால் இடம் பெற்றுள்ளதாக அறிகின்றேன்.

தொல்பொருள் திணைக்களத்தில் உதவியுடன் வெடுக்குநாறி மலையை பௌத்த மயமாக்கி,அதனை விகாரையாக்குவதற்காக அவர்கள் தொடர்ச்சியாக இரண்டு வருடங்களுக்கு மேல் முயற்சி செய்து வந்தார்கள்.

குறித்த சம்பவத்தை வன்மையாக கண்டிக்கின்றேன்.

அதே போல் வடக்கு- கிழக்கில் இருக்கும் தமிழர்களின் மத கலாச்சார அடையாளங்களை அழித்து மிக தீவிரமாக பௌத்த மயமாக்க நடவடிக்கைகள் இடம் பெற்று வருகின்றது.

குறித்த செயல்பாடுகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.தொல்பொருள் திணைக்களம் தொடர்ச்சியாக  வடக்கு கிழக்கில் பல்வேறு இடங்களில் குறித்த செயல்பாட்டை முன்னெடுத்து வருகின்றது.

வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வர ஆலயம் தாக்கப்பட்டு உடைக்கப்பட்டமை க்கு எதிராக எதிர்வரும் 30 ஆம் திகதி வியாழக்கிழமை காலை 9.30 மணிக்கு வவுனியா கந்தசாமி ஆலயம் முன்பாக ஆர்ப்பாட்டம் ஆரம்பித்து வவுனியா மாவட்டச் செயலகத்தை வந்தடைய உள்ளது.

குறித்த ஆர்ப்பாட்டத்திற்கு மக்கள் ஆதரவு வழங்க வேண்டும் என கேட்டுக் கொள்வதோடு,தொடர்ச்சியாக தொல்பொருள் திணைக்களம் பௌத்த மயமாக்கலுக்கு ஆதரவாக வடக்கு கிழக்கில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.எனவும் அவர் தெரிவித்தார்.

#SriLankaNews

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

Advertisement

ஜோதிடம்

Rasi Palan new cmp 10 Rasi Palan new cmp 10
ஜோதிடம்11 மணத்தியாலங்கள் ago

இன்றைய ராசி பலன் 13.05.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan

இன்றைய ராசி பலன் 13.05.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan நாளின் தொடக்கத்தில் நாம் நாளுக்குரிய ராசிபலனை அறிந்து கொண்டு அதற்கேற்றாற்போல்...

Rasi Palan new cmp 9 Rasi Palan new cmp 9
ஜோதிடம்2 நாட்கள் ago

​இன்றைய ராசி பலன் 12.05.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan

​இன்றைய ராசி பலன் 12.05.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan இன்றைய ராசிபலன் மே 12, 2024, குரோதி வருடம் 29,...

tamilnaadi 1 tamilnaadi 1
ஜோதிடம்3 நாட்கள் ago

​இன்றைய ராசி பலன் 11.05.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan

​இன்றைய ராசி பலன் 11.05.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan இன்றைய ராசிபலன் மே 11, 2024, குரோதி வருடம் சித்திரை...

Rasi Palan new cmp 8 Rasi Palan new cmp 8
ஜோதிடம்3 நாட்கள் ago

இன்றைய ராசி பலன் 10.05.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan

இன்றைய ராசி பலன் 10.05.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan இன்றைய ராசிபலன் மே 10, 2024, குரோதி வருடம் சித்திரை...

Rasi Palan new cmp 7 Rasi Palan new cmp 7
ஜோதிடம்4 நாட்கள் ago

​இன்றைய ராசி பலன் 09.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan

​இன்றைய ராசி பலன் 09.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan இன்றைய ராசிபலன் மே 09, 2024, குரோதி வருடம் சித்திரை...

Rasi Palan new cmp 6 Rasi Palan new cmp 6
ஜோதிடம்6 நாட்கள் ago

​இன்றைய ராசி பலன் 08.05.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan

​இன்றைய ராசி பலன் 08.05.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan இன்றைய ராசிபலன் மே 8, 2024, குரோதி வருடம் சித்திரை...

Rasi Palan new cmp 5 Rasi Palan new cmp 5
ஜோதிடம்7 நாட்கள் ago

​இன்றைய ராசி பலன் 07.05.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan

​இன்றைய ராசி பலன் 07.05.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan இன்றைய ராசிபலன் மே 7, 2024, குரோதி வருடம் சித்திரை...