கிணற்றில் தவறி விழுந்து மூதாட்டி ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் இன்று காலை பதிவாகியுள்ளது.
அமெரிக்கன் மிஷின் வீதி மாவட்டபுரம் வடக்கு தெல்லிப்பளை பகுதியை சேர்ந்த முருகேசு நல்லம்மா வயது 74 என்ற மூதாட்டியே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மூதாட்டி கிணற்றுக்குகள் விழுந்த சம்பவம் தொடர்பில் தெல்லிப்பழை பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டது.
சம்பவ இடத்துக்கு அழைக்கப்பட்ட வலிகாமம் கிழக்கு திடீர் மரண விசாரணை அதிகாரி ஆறுமுகம் ஜெயபாலசிங்கம் விசாரணைகளை மேற்கொண்டார்.
சடலம் உடல் கூற்று பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
#SriLankaNews
Leave a comment