letter
இலங்கைசெய்திகள்

“நீங்கள் ஒரு தானம் செய்ததாக நினைத்துக் கொள்ளுங்கள்” – பேர்ஸ் உரிமையாளருக்கு திருடனிடமிருந்து கடிதம்

Share

இலங்கையில் திருடன் ஒருவனின் செயற்பாடு குறித்து நாட்டு மக்கள் வியப்பில் ஆழ்ந்துள்ளனர்.

அண்மையில் கொழும்பில் இருந்து மாத்தறை நோக்கி பயணிக்கும் ரயிலில் பயணி ஒருவரின் பேர்ஸை ஒருவர் கொள்ளையிட்டுள்ளார்.

இந்நிலையில் பேர்ஸை இழந்த நபருக்கு கொள்ளையரிடமிருந்து கடிதம் ஒன்று கிடைத்துள்ளது.

அந்தக் கடிதத்தில் தேசிய அடையாள அட்டை உள்ளிட்ட முக்கிய ஆவணங்கள் இருந்துள்ளன. அதில் குறிப்பு ஒன்றும் எழுதி வைத்துள்ளார்.

அந்த பதிவில், “உங்களை கடவுள் ஆசி வழங்கியுள்ளார். எனக்கு ஒரு பணத்தேவை இருந்தது. இதனால் தான் பணத்தை எடுத்தேன். இல்லை என்றால் பணத்தையும் திருப்பி அனுப்பியிருப்பேன். இந்த நேரத்தில் அது பெரிய உதவியாக இருந்தது.

அத்துடன் உங்கள் பேர்ஸ் மிகவும் பழையதாக இருந்தது. புதிதாக ஒன்று வாங்குங்கள். இல்லை என்றால் இந்த கடிததத்துடன் அதனையும் அனுப்பி வைத்திருப்பேன். நீங்கள் ஒரு தானம் செய்ததாக நினைத்துக் கொள்ளுங்கள். மிக்க நன்றி” என கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

திருடனிடமிருந்து கிடைத்த கடிதம் மற்றும் தனது ஆவணங்களை பேர்ஸ் உரிமையாளர் சமூக வலைத்தளங்களில் பதிவு செய்துள்ளார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 26
செய்திகள்இந்தியா

மக்களின் தீர்ப்பை பணிவுடன் ஏற்கிறோம்: வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து மு.க.ஸ்டாலின் அறிக்கை

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியானதைத் தொடர்ந்து, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து...

world 25
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தங்கல்லையில் பரபரப்பு: போதையில் வானத்தை நோக்கித் துப்பாக்கியால் சுட்ட நபர் கைது

இலங்கையின் தென் மாகாணத்திலுள்ள தங்கல்லை, குடவெல்ல பகுதியில் நேற்று (மே 04) மாலை நபர் ஒருவர்...

world 24
செய்திகள்இந்தியா

தமிழகத் தேர்தலில் தவெக சாதனை வெற்றி: மே 7-ல் முதல்வராகப் பதவியேற்கிறார் விஜய்

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், முதல்முறையாகத் தேர்தல் களத்தைக் கண்ட நடிகர் விஜய்யின்...

world 23
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நிதிச் செயலாளர் ஹர்ஷன சூரியப்பெரும இரட்டைக் குடியுரிமை பெறவில்லை: அமைச்சர் நலிந்த ஜயதிஸ விளக்கம்

இலங்கை நிதி அமைச்சின் செயலாளர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும, தனது பதவிக்காலத்தின் எந்தவொரு கட்டத்திலும் இரட்டைக்...