அழகுக் குறிப்புகள்
உதடுகளை அழகாக்க சிறந்த வழிகள்
பல மணிநேரம் எடுத்து மணிக்கணக்கில் மேக்கப், ஹேர் ஸ்ரைல், உடை மற்றும் நகைகள் அணிந்தாலும் இவை எதிலுமே இல்லாத அழகை உங்கள் புன்னகை கொடுத்துவிடும்.
அவ்வாறான அந்த புன்னகை தரும் உங்கள் உதடுகளை அலட்சியப்படுத்திவிடலாமா? கொஞ்சம் அக்கறை காட்டினால் உங்கள் புன்னகை இன்னும் அழகாகும்.
- எலுமிச்சையின் சாற்றில் சர்க்கரையை சேர்த்து சர்க்கரை கரைவதற்குள், அதனை உதடுகளில் மென்மையாக தடவி 10 நிமிடம் ஊற வையுங்கள். பின் குளிர்ந்த நீரில் கழுவி வந்தால் உதடுகளில் உள்ள கருமை நீங்கி உதடுங்கள் மென்மையாகவும் அழகாகவும் மாறும்.
இதனை இரவு தூங்கச் செல்லும் முன் செய்துவந்தால் நல்லது. - கற்றாழை ஜெல்லை இரவு தூங்கும் முன் உதடுகளில் தடவை இரவு முழுவதும் விட்டு விட்டு மறுநாள் காலையில் கழுவினால் உதடுகளின் அழகு அதிகரிக்கும்.
- பீற்றூட்டை துண்டுகளாக வெட்டி அதனை உதடுகளில் பூசி 15–20 நிமிடங்கள் கழித்து கழுவினால் உங்கள் உதடுகள் சிவந்த உதடுகளாக மாறுவதை காண்பீர்கள்.
- தயிரை உதட்டில் தடவை மசாஜ் செய்து வர நாளடைவில் உதட்டின் கருமை நீங்கி உதடு மென்மை பெறும்.
- வெண்ணெய் உதடுகளின் வறட்சியை போக்கவல்லது. உதட்டுக்கு வெண்ணெய் தடவி வந்தால் உடனே உதட்டின் வறட்சி நீங்கி நிறம் மாறுவதை உணர்வீர்கள்.
- ரோஸ் வாட்டர் உதட்டின் கருமையை போக்கவல்லது. ரோஸ் வாட்டரை ஒரு பஞ்சில் நனைத்து உதட்டை சுற்றி தடவி இரவு படுக்கச் செல்லுங்கள். இவ்வாறு செய்து வந்தால் ஒரு வாரத்தில் கருமை மறைந்து உதடுகள் சிவப்பாகும்.
You must be logged in to post a comment Login