1854764 mark
உலகம்செய்திகள்

உலகிற்கு தனது 3வது குழந்தையை வரவேற்ற மார்க்

Share

மெடா நிறுவனர் மார்க் ஜூக்கர்பர்க் தனது 3வது பெண் குழந்தையை வரவேற்றுள்ளார். மார்க் சுக்கர்பர்க் கடந்த 2012ம் ஆண்டு பிரிசில்லா சான் என்பவரை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர்.

இந்நிலையில், மார்க் ஜூக்கர்பர்க் தம்பதிக்கு சமீபத்தில் மூன்றாவதாக மீண்டும் பெண் குழந்தை பிறந்துள்ளது. இதுதொடர்பான அறிவிப்பை மார்க் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்களுடன் பகிர்ந்து குழந்தையை வரவேற்றுள்ளார்.

அந்த பதிவில், “உலகிற்கு வருக அரேலியா சான் ஜூக்கர்பெர்க்! நீ எங்களின் சிறிய ஆசீர்வாதம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் மார்க் தனது பிறந்த குழந்தையைப் பார்த்து புன்னகைக்கும் புகைப்படமும், பிரிசில்லா சான் குழந்தையை தன் மீது வைத்திருக்கும் புகைப்படமும் இணையத்தில் வைரலாகி வருகிறது.

#world #technology

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
02 29
செய்திகள்இலங்கை

ஈரானுடன் கைக்கோர்க்கும் மைத்திரி: தூதுவர் அலிரேசா டெல்கோஷுடன் திடீர் சந்திப்பு!

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் இலங்கைக்கான ஈரானியத் தூதுவர் அலிரேசா டெல்கோஷ் (Alireza Delkhosh)...

02 28
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மருத்துவர்களுக்குச் சனிக்கிழமை விடுமுறை? – அரசாங்கத்திற்கு மருத்துவ நிபுணர்கள் சங்கம் அவசர கோரிக்கை!

நாட்டில் நிலவி வரும் கடுமையான எரிபொருள் நெருக்கடி மற்றும் அதீத விலை உயர்வு காரணமாகச் சுகாதாரத்...

02 27
செய்திகள்உலகம்

16 வயதிற்குட்பட்டோருக்குச் சமூக ஊடகத் தடை: பிரித்தானியப் பிரபுக்கள் சபையில் மீண்டும் தீர்மானம் நிறைவேற்றம்!

16 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதைத் தடை செய்யும் முன்மொழிவுக்கு ஐக்கிய இராச்சியத்தின் பிரபுக்கள்...

02 26
செய்திகள்உலகம்

எரிசக்தி ஒத்துழைப்பு: ரஷ்யாவின் உயர்மட்டத் தூதுக்குழு இன்று இலங்கை வருகை!

ரஷ்ய எரிசக்தி பிரதி அமைச்சர் ரோமன் மார்ஷவின் (Roman Marshavin) தலைமையிலான உயர்மட்ட இராஜதந்திரத் தூதுக்குழுவொன்று...