பாராளுமன்றத்தில் இன்று (24) கேள்வி எழுப்பிய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, ஒரேயொரு சொல்லில் பதிலளிக்குமாறு கேள்வியெழுப்பினார். அதற்கு பிரதமர் தினேஷ் குணவர்தன பல சொற்களை இணைந்து பதிலளித்தார்.
முன்னதாக கேள்வியெழுப்பிய சஜித் பிரேமதாஸ, தேர்தலை நடத்துவதற்கு, பணம் தருகிறீர்களா? இல்லையா? அதற்கு ஒரு வார்த்தையில் பதிலளிக்குமாறு பிரதமரிடம் கேட்டுக்கொண்டார்.
2023ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத் திட்டத்தில் தேர்தலுக்காக 10 பில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், அந்த 10 பில்லியனை தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு வழங்கி தேர்தலை நடத்தும் பொறுப்பு அரசாங்கத்துக்கு இருப்பதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
இதற்கு பதிலளித்த பிரதமர் பிரதமர் தினேஷ் குணவர்தன, இதுபற்றி உயர் நீதிமன்றத்தில் பல விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.அந்தத் தீர்ப்புகளின் படியே நாங்கள் செயல்பட்டு வருகிறோம் என்றார்.
#SriLankaNews
Leave a comment