ஊடகங்களுடன் பிரச்சினைகள் இருப்பின் அதனை பாராளுமன்றத்துக்கு உள்ளேயே தீர்த்துக்கொள்வோம் என்று முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அதனை நீதிமன்றம் வரை கொண்டு செல்ல வேண்டாம் என்று கேட்டுக்கொண்டார்.
பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற பெற்றோலிய வளங்கள் சட்ட ஒழுங்குவிதிகள், கட்டளை தொடர்பான விவாதத்தின் போதே அவர் இதனை தெரிவித்தார்.
அதன்போது அவர் மேலும் கூறுகையில்,
நான் ஜனாதிபதியாக இருந்த காலத்தில் என்னை ஊடகங்கள் திட்டமிட்டு விமர்சித்தன. எம்.பிக்கள் தொடர்பில் பொய்யான செய்திகளையும் வெளியிட்டன. தவறான வகையில் தனிப்பட்ட ரீதியில் விமர்சிக்கப்பட்டது.
நான் 19 ஆவது திருத்தத்தின் ஊடாக ஊடக சுதந்திரத்தை முழுமையாக வழங்கியிருந்தேன். என்னை விமர்சித்த போதும் நான் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் குறித்த நிகழ்ச்சி தொடர்பான விடயத்தை நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லாது இங்கேயே தீர்த்துக்கொள்வோம் – என்றார்.
#SriLankaNews
Leave a comment