1678202512 Shehan Semasinghe L
இலங்கைசெய்திகள்

நலன்புரி கொடுப்பனவு – பணிகள் இறுதிக்கட்டத்தில்

Share

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரைக்கு அமைய முன்னெடுக்கப்படும் நலன்புரி கொடுப்பனவுகளுக்காக தற்போது நடைபெற்று வரும் தகுதியானவர்களை அடையாளங் காணும் நடவடிக்கையில் இதுவரை செயற்படுத்தப்பட்டுள்ள தகவல் கணக்கெடுப்பு மற்றும் தகவல் சரிபார்ப்பு நடவடிக்கைகளின் மூலம் பெறப்பட்ட 11 இலட்சம் விண்ணப்பங்களின் தகவல் சரிபார்ப்பு நடவடிக்கை நிறைவடைந்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

நாடளாவிய ரீதியில் 334 பிரதேச செயலகங்களில் இருந்து பெறப்பட்ட 37 இலட்சம் விண்ணப்பங்களின் நலன்புரி கொடுப்பனவுகளை வழங்குவதற்கான தகுதி சரிபார்த்தல் பணிகள் இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளது.

பரிசீலிக்கப்பட்டு பூர்த்தி செய்யப்பட்டுள்ள விண்ணப்பங்களில் அதிகளவானவை களுத்துறை மாவட்டத்திற்குரியவை எனவும் அது, 46% என்று குறிப்பிட்ட அமைச்சர், பதுளை மாவட்டத்தில் 34%, வீதமும், காலி மாவட்டத்தில் 32% வீதம் என்ற அடிப்படையில் முழு நாட்டையும் உள்ளடக்கிய வகையில் இந்த 11 இலட்சம் விண்ணப்பங்களின் தகவல் சரிபார்ப்பு நிறைவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்த தகவல் கணக்கெடுப்பு, இம்மாதம் 31 ஆம் திகதியுடன் முடிவடைவதால், தகவல் கணக்கெடுப்பு நடத்தும் அதிகாரிகளுக்கு சரியான தரவுகளை விரைவில் வழங்குமாறு அனைத்து விண்ணப்பதாரிகளையும் இராஜாங்க அமைச்சர் கோரியுள்ளார்.

அத்தோடு உரிய திகதிக்கு முன்னர் சரியான தகவல்களை வழங்கத் தவறும் விண்ணப்பதாரிகள், நலன்புரிச் சலுகைகளை இழக்க நேரிடும் எனவும் நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க வலியுறுத்தியுள்ளார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
images 1
செய்திகள்இலங்கை

ரயில் பயணிகள் அவதானம்: நவம்பர் மாதப் பருவச் சீட்டின் செல்லுபடி காலம் டிசம்பர் 7 வரை நீடிப்பு!

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை மற்றும் ரயில் போக்குவரத்துப் பாதிப்புகள் காரணமாக, நவம்பர் மாதத்துக்கான ரயில்...

images
செய்திகள்இலங்கை

மீட்புப் பணிகள் நடக்கும் இடங்களில் ட்ரோன்களைப் பறக்க விட வேண்டாம்: இலங்கை விமானப்படை எச்சரிக்கை!

நாட்டில் ஏற்பட்டுள்ள பேரழிவு காரணமாகப் பல பகுதிகளில் மீட்புப் பணிகள் தீவிரமாக இடம்பெற்றுவரும் நிலையில், அப்பகுதிகளில்...

24 6717c3776cee3
செய்திகள்இலங்கை

சீனாவின் பாரிய நிவாரண உதவி: இலங்கைக்காக 1 மில்லியன் அமெரிக்க டாலர்!

நாட்டில் ஏற்பட்டுள்ள பாரிய பேரழிவின் தாக்கத்தில் இருந்து இலங்கை மீள்வதற்காக, சீனா அரசாங்கம் இரண்டு வகைகளில்...

download
செய்திகள்இலங்கை

கண்டி மாவட்டத்தில் விமானம் மூலம் நிவாரணப் பொருட்கள் விநியோகம்: தரைவழியாக அணுக முடியாத பகுதிகளுக்கு உதவி!

கண்டி மாவட்டத்தில் ஏற்பட்ட அனர்த்த நிலைமை காரணமாக தரைவழியாக அணுக முடியாத பகுதிகளில் சிக்கித் தவிக்கும்...