Maithripala Sirisena
அரசியல்இலங்கைசெய்திகள்

மைத்திரியின் மனு விசாரணைக்கு!!

Share
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பில், தமக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட தனிப்பட்ட முறைப்பாட்டை இரத்து செய்யுமாறு கோரி முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தாக்கல் செய்த ரிட் மனுவை ஐவரடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்வதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம், செவ்வாய்க்கிழமை (14) தீர்மானித்தது.

மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் நீதியரசர் நிஷங்க பந்துல கருணாரத்ன மற்றும் ஏ. மரிக்கார் ஆகியோர் அடங்கிய அமர்வு மனு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, ஐவரடங்கிய நீதியரசர்கள் குழாமுக்கு மேன்முறையீட்டு நீதிமன்றின் சிரேஷ்ட நீதியரசர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று, நீதியரசர் நிஷங்க பந்துல கருணாரத்ன அறிவித்தார்.

ரிட் மனு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு இறுதித் தீர்மானம் அறிவிக்கப்படும் வரை கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் உள்ள வழக்கை அழைக்க வேண்டாம் என்றும் நீதியரசர், கோட்டை நீதவானுக்கு உத்தரவிட்டார்.

முன்னாள் ஜனாதிபதிக்கு எதிராக குற்றவியல் சட்டத்தின் 298 ஆவது பிரிவின் கீழ் சட்ட நடவடிக்கை எடுக்குமாறு கோரி, அருட்தந்தை சிறில் காமினி பெர்னாண்டோ மற்றும் ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்ட ஜேசுராஜ் கணேசன் ஆகியோர், கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் தனிப்பட்ட முறைப்பாடு ஒன்றை தாக்கல் செய்திருந்தனர்.

கொலை வரம்பில் வராத மரணம் விளைவிக்கும் குற்றத்துக்கு சமமான கவனமற்ற செயலை செய்து பலரின் உயிரிழப்பை ஏற்படுத்தியத்தியமைக்கு, தாக்குதல் தினத்தன்று பாதுகாப்பு அமைச்சராகவும், சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சராகவும் செயற்பட்ட முன்னாள் ஜனாதிபதியே பொறுப்பு என்று மனுதாரர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான ஏற்கவியலாத சாட்சியங்கள் மற்றும் செவிவழிச் சாட்சியங்களை கருத்திற்கொண்டு நீதவான் நோட்டீஸ் பிறப்பித்திருந்ததாகவும் தனது விருப்புரிமை அதிகாரத்தை சரியாகப் பயன்படுத்த கோட்டை நீதவான் தவறிவிட்டார் என்றும் மைத்திரிபால சிறிசேன தனது மனுவில் சுட்டிக்காட்டியுள்ளார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...