இளைய தளபதி விஜய் அண்மையில் சென்னையில் நடைபெற்ற திருமண நிகழ்வொன்றில் கலந்து கொண்டுள்ளார்.
இந்த திருமண நிகழ்வில் பல நட்சத்திரங்கள் கலந்துகொண்டுள்ள நிலையில் நடிகர்கள் ஜெயம்ரவி, விக்ரம்பிரபு மற்றும் பாடகர் கிரிஷ் ஆகியோரும் வருகை தந்துள்ளனர். அவர்கள் இளைய தளபதி விஜய்யுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகின்றதுன.
இந்த நிலையில் அதே திருமண நிகழ்வுக்கு சன் குழுமத்தின் தலைவர் கலாநிதி மாறன் மற்றும் தி.மு.க. எம்பி. தயாநிதிமாறன் ஆகியோரும் கலந்துகொண்டுள்ளனர்.
அவர்களும் நடிகர் விஜய்யை சந்தித்து புகைப்படம் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் வெளிவந்துள்ளன.
இளைய தளபதி விஜய் தற்போது நடித்து வரும் ‘பீஸ்ட்’ படத்தை ‘சன் பிக்சர்ஸ்’ நிறுவனம் தயாரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
தற்போது திருமண நிகழ்வில் கலந்துகொண்ட நட்சத்திரங்களுடன் விஜய் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் மற்றும் காணொலிகள் தற்போது ரசிகர்களிடையே வைரலாகி வருகின்றன.
Leave a comment