corona
உலகம்செய்திகள்

காய்ச்சல் அதிகரிப்பு- மீண்டும் ஊரடங்கு!!

Share

சீனாவில் முதன்முறையாக கொரோனோ தொற்று கண்டறியப்பட்டு உலகம் முழுவதும் பரவி லட்சக்கணக்கான மக்களை காவு வாங்கி விட்டது.

தடுப்பூசி, ஊரடங்கு போன்ற நடவடிக்கையால் கொரோனா கட்டுக்குள் வந்தாலும் அது அடுத்தடுத்து உருமாறி இன்னும் இந்த நோயின் தாக்கம் இருந்து கொண்டு தான் உள்ளது. இந்த சூழ்நிலையில் சீனாவில் மீண்டும் காய்ச்சல் தொற்று அதிகரித்து வருகிறது. தினமும் ஏராளமானவர்கள் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரிக்கு படையெடுத்த வண்ணம் உள்ளனர்.

நோய் தொற்று வேகமாக பரவ தொடங்கி உள்ளதால் அதனை கட்டுப்படுத்த சீனாவில் பல நகரங்களில் மீண்டும் கட்டுப்பாடுகள் விதிக்க அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது. சீயான் மற்றும் ஷாங்கி நகரங்களில் தான் இதன் வேகம் அதிகமாக உள்ளது. தொடர்ந்து காய்ச்சலால் கடுமையான அச்சுறுத்தல் ஏற்பட்டால் ஊரடங்கை அமல்படுத்த அரசு திட்டமிட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் வீடுகளை விட்டு வெளியே வரக்கூடாது என அறிவுறுத்தப்பட்டு உள்ளது. வீடுகளில் இருந்து சிகிச்சை மேற்கொள்ளுமாறு பொது மக்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டு இருக்கிறது.

#world

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Untitled 68
செய்திகள்இலங்கைபிராந்தியம்

காலி – தெலிக்கடையில் பயங்கரம்: ஆணும் பெண்ணும் வெட்டிக் கொலை – ஓய்வுபெற்ற இராணுவ வீரர் கைது!

காலி, தெலிக்கடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் இன்று (ஏப்ரல் 03, 2026) அதிகாலை இடம்பெற்றதாகக் கூறப்படும்...

Untitled 67
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கைச் சுற்றுலாவில் 19.7% சரிவு: மார்ச் மாதத்தில் வருகை தந்த பயணிகளின் எண்ணிக்கை வெளியீடு!

இலங்கைச் சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை (SLTDA) வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையின்படி, 2026 மார்ச் மாதத்தில்...

Untitled 66
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சம்பா அரிசி தட்டுப்பாட்டுக்குத் தீர்வு: பொன்னி மற்றும் கீரி பொன்னி இறக்குமதிக்கு அரசாங்கம் அனுமதி!

இலங்கையில் நிலவும் சம்பா மற்றும் கீரி சம்பா அரிசி தட்டுப்பாட்டைப் போக்கி, சந்தையை நிலைப்படுத்துவதற்காக விசேட...

Untitled 65
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சிலாபத்தில் பாரிய இணையவழி நிதி மோசடி: 147 வெளிநாட்டுப் பிரஜைகள் அதிரடி கைது!

இலங்கையின் சிலாபம், இரணாவில பகுதியில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்து, சர்வதேச ரீதியிலான ஒழுங்கமைக்கப்பட்ட...