1846060 thalippu vadagam
சமையல் குறிப்புகள்பொழுதுபோக்கு

வெங்காய வடகம்

Share

தேவையான பொருட்கள்

சின்ன வெங்காயம் – 2 கிலோ
வெள்ளை முழு உளுந்து – 200 கிராம்
பெருங்காயப்பொடி – 1 தேக்கரண்டி
கடுகு – 1 மேசைக்கரண்டி
மஞ்சள் பொடி – 1 தேக்கரண்டி
வெந்தயப்பொடி – 2 தேக்கரண்டி
உப்பு – தேவையான அளவு
கொத்தமல்லித்தழை – 1 கட்டு
கறிவேப்பிலை – ஒரு சிறிய கப் அளவு

கரகரப்பாக அரைக்க

மிளகாய் வத்தல் – 10
சீரகம் – 2 மேசைக்கரண்டி
பூண்டு – 1 பெரியது

செய்முறை

2 கிலோ வெங்காயத்தை தோலுரித்து பொடிதாக நறுக்கி ஒரு பேப்பரில் பரப்பி நான்கு மணி நேரம் உலர விடவும்.

உளுந்தம் பருப்பை 2 மணி நேரம் ஊற வைக்கவும். கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை இரண்டையும் பொடியாக நறுக்கி வைக்கவும்.

பூண்டை தோலுரித்து வைக்கவும். மிளகாய் வத்தல், சீரகம், பூண்டு மூன்றையும் மிக்ஸ்சியில் கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும்.

பருப்பை நன்றாக கழுவி தண்ணீரை வடித்து விட்டு அதனுடன் உப்பு சேர்த்து கிரைண்டரில் தண்ணீர் விடாமல் கெட்டியாக அரைத்து ஒரு வாயகன்ற பாத்திரத்தில் எடுத்து வைக்கவும்.

இட்லி பதத்திற்கு அரைக்க தேவை இல்லை. 10 நிமிடம் அரைத்தால் போதும். அரைத்த மாவுடன் நறுக்கிய வெங்காயம், கடுகு, பெருங்காயப்பொடி, மஞ்சள்பொடி, வெந்தயப்பொடி, கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை எல்லாவற்றையும் சேர்த்து நன்கு பிசைந்து வைக்கவும்.

பிறகு கையை தண்ணீரில் நனைத்துக் கொண்டு வெங்காய கலவையை உருட்டாமல் சிறிது சிறிதாக எடுத்து தட்டுகளில் வைத்து வெயிலில் காய வைக்கவும்.

உருட்டி வைத்தால் வறுக்கும் போது சரியாக வேகாது. அடுத்த நாள் வடகம் தட்டோடு ஒட்டி இருக்கும். எனவே ஒரு சிறிய மேஜைக்கரண்டி கொண்டு எடுத்து ஒரு பேப்பரில் பரப்பி வெயிலில் காய வைக்கவும்.

இரண்டு நாட்களில் வடகம் நன்கு காய்ந்து விடும். பிறகு ஒரு காற்றுப்புகாத டப்பாவில் போட்டு மூடி வைக்கவும்.

தேவையான போது வறுத்து கொள்ளலாம்.

#LifeStyle

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Recent Posts

தொடர்புடையது
Untitled 37
பொழுதுபோக்குசினிமா

திருமண பந்தத்தில் இணைந்தார் நடிகை ஜனனி: துபாய் விமானியை கரம் பிடித்த ‘தெகிடி’ நாயகி!

பிரபல தமிழ் மற்றும் மலையாளத் திரைப்பட நடிகை ஜனனி, தனது நீண்ட நாள் காதலரான சாய்...

Untitled 28
பொழுதுபோக்குசினிமா

மீண்டு வரும் “இயக்குநர் இமயம்”: பாரதிராஜாவின் தற்போதைய நிலை குறித்து மருத்துவர்கள் உற்சாக தகவல்!

தமிழ் சினிமாவின் அடையாளமாகத் திகழும் மூத்த இயக்குநர் பாரதிராஜா, கடந்த சில மாதங்களாகத் தீவிர உடல்நலக்...

Untitled 27
சினிமாபொழுதுபோக்கு

விஜய்யின் சொத்து விவரங்கள்: மனைவி சங்கீதாவின் சொத்துகள் மற்றும் முரண்பாடுகள் குறித்த அரசியல் விவாதம்!

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்காக பெரம்பூர் தொகுதியில் வேட்புமனுத் தாக்கல் செய்துள்ள தமிழக வெற்றிக் கழகத் தலைவர்...

Untitled 26
பொழுதுபோக்குசினிமா

விஜய் எனது தம்பி; ஆனால் போட்டி திமுக – அதிமுக இடையேதான்: சுந்தர் சி பேச்சு!

தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தனது...