Dermatology 7777
அழகுக் குறிப்புகள்பொழுதுபோக்கு

பொடுகு, பேன் தொல்லையா? தப்பிக்க இலகுவழிகள்

Share

பெண்கள் தங்களில் அழகை மெருகூட்டுவதில் கூந்தலுக்கு முக்கிய பங்கு கொடுக்கிறார்கள். ஆனால் உங்கள் கூந்தலில் பேன், பொடுகு தொல்லை இருந்தால் அது அரிப்பையும் அலர்ஜியையும் உண்டாக்கி விடும்.

இது கூந்தலில் அழகையும் ஆரோக்கியத்தையும் கெடுத்து விடுகிறது.

தலையில் ஏற்படுகின்ற வறட்சி, தலையை குளித்துவிட்டு துவட்டாமல் விடுதல் மற்றும் தலையில் உண்டாகும் அழுக்கு, வியர்வை போன்ற காரணங்களால் பொடுகு ஏற்பட்டு விடுகிறது.

அத்துடன் தலையில் பேன் வந்தால் தலையில் கட்டிகள், புண்கள் ஏற்பட வாய்ப்புண்டு.

hair ir

எனவே இவற்றின் தொல்லையிலிருந்து விடுபட கடைப்பிடிக்க வேண்டியவற்றை பார்ப்போம்.

  • குளிக்கும் நீரில் முதல் இரவே வேப்பிலைகளை போட்டு வைத்து மறுநாள் அந்த நீரால் தலைக்கு குளித்து வந்தால் பேன் தொல்லை நீங்கிவிடும்.
  • அதேபோல் வேப்பிலையை பேஸ்ட் செய்து அரைத்து குளிப்பதற்கு அரை மணிநேரம் முன் தலையில் தேய்த்து ஊற வைத்து அலசினால் நல்ல பயன் கிடை்க்கும்.
  • இரவு தூங்கும்போது வேப்பிலை மற்றும் துளசி போன்ற இலைகளை தலைக்கீழே வைத்து தூங்கினால் விரைவில் பேன் தொல்லை நீங்கிவிடும்.
  • வெந்தயத்தை இரவு ஊறவைத்து மறுநாள் வெந்தயத்துடன் தேங்காய் பால் சேர்த்து அரைத்து பின் எலுமிச்சை சாறு கலந்து தலையில் மசாஜ் செய்து குளித்து வந்தால் பொடுகுத் தொல்லை அறவே நீங்கிவிடும்.
  • குப்பைமேனி கீரையை சாறு எடுத்து அதனை தலையில் தேய்த்து குளித்து வரலாம்.
  • வாரந்தோறும் ஒருமுறை தலைக்கு நல்லெண்ணை தேய்த்து சீயக்காய் போட்டு குளித்து வந்தால் தலையிலுள்ள பிரச்சினைகள் நீங்கிவிடும்.
  • ஒரு கப் நல்லெண்ணெய்யுடன் ஒரு கரண்டி மிளகு உடைத்து காய்ச்சி வடிகட்டி அந்த எண்ணெய்யை தலைக்கு வைத்து மசாஜ் செய்து சீப்பால் வாரிவந்தால் பொடுகு, பேன் என்பவை நீங்கிவிடும்.
  • தினமும் தலைக்கு எண்ணெய் தடவி வாரி வந்தாலே தலையிலுள்ள பிரச்சினைகள் முற்றிலும் தீர்ந்து விடும்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
20 1
செய்திகள்பொழுதுபோக்கு

இறுதி நாளில் இந்தியாவை வீழ்த்திய இங்கிலாந்து

சுற்றுலா இந்திய அணிக்கும் இங்கிலாந்து அணிக்கும் இடையிலான முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி...

1 11
செய்திகள்பொழுதுபோக்கு

இந்தியா-இங்கிலாந்து இடையிலான போட்டியின் போது பண்ட் செய்த செயல்

இந்தியா-இங்கிலாந்து இடையிலான போட்டியில் ரிசப் பண்ட் நடுவரின் கண்முன்னே பந்தை கோபமாக தூக்கி எறிந்த காணொளி...

25 6846d907331d9
செய்திகள்பொழுதுபோக்கு

நேஷன்ஸ் லீக் கால்பந்து தொடர்: 2ஆவது முறையாக வென்றது ரொனால்டோவின் போர்ச்சுகல் அணி

ஐரோப்பிய கால்பந்து கூட்டமைப்பு சார்பில் நேஷன்ஸ் லீக் சர்வதேச கால்பந்து போட்டியில் ரொனால்டோ(Cristiano Ronaldo) தலைமையிலான...

4 38
செய்திகள்பொழுதுபோக்கு

மேற்கிந்திய தீவுகள் அணியை 238 ஓட்டங்களால் தோற்கடித்த இங்கிலாந்து அணி

எட்ஜ்பஸ்டனில் நேற்று இடம்பெற்ற, முதல் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில், இங்கிலாந்து அணி 238 ஓட்டங்கள்...