1669265123 1669262223 Rupees L
இலங்கைசெய்திகள்

எகிறும் ரூபாவின் பெறுமதி

Share

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரித்துள்ளதுடன், டொலரின் கொள்வனவு விலை ரூபா 318.30 ஆக காணப்படுகின்றது.

இலங்கை மத்திய வங்கியினால் இன்று காலை வெளியிடப்பட்ட வெளிநாட்டு நாணய மாற்று வீதங்களின்படி, அமெரிக்க டொலரின் விற்பனை விலை ரூபா 335.75 ஆக இருக்கின்றது.

நாட்டின் பொருளாதார நிலைமையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ள நிலையில் அண்மைய நாட்களாக அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி கணிசமாக அதிகரித்து வருகின்றது.

தரகர்கள் மற்றும் நிபுணர்களின் கூற்றுப்படி, சர்வதேச நாணய நிதியத்துடன் அரசாங்கம் மேற்கொண்டுள்ள முன்னேற்றம் மற்றும் தொழிலாளர்களின் பணப்பரிமாற்றத்தின் அதிகரிப்பு காரணமாக முதலீட்டாளர்கள் மத்தியில் நம்பிக்கை அதிகரிப்பதன் மூலம் ரூபாயின் மதிப்பு உயர்வடைகிறது.

தொடரும் நாட்களில் ரூபா மதிப்பு மேலும் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
லக்ஷ்மன் யாப்பா
இலங்கை

முன்னாள் அமைச்சர் மீது ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு வழக்குத் தாக்கல்!

முன்னாள் அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தனவுக்கு எதிராக, வர்த்தகர் ஒருவரிடமிருந்து 10 இலட்சம் ரூபாய் பணத்தை...

nilam 1
இலங்கை

காணி அளவீட்டுக்கு எதிர்ப்பு வெளியிட்டு யாழில் இன்று போராட்டம்.

மருதங்கேணி பிரதேச செயலாளர் பிரிவில் படைத்துறைக்கு 25 ஏக்கர் வரையான காணி சுவீகரிப்பதற்கு எதிராக தற்போது...

crime 09
இலங்கை

பெண் மருத்துவரின் கொலைக்கு காரணம் என்ன? – நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட குற்றவாளிகள்.

தெல்தெனியவில் சடலமாக மீட்கப்பட்ட, பெண் உடலியல் சிகிச்சை நிபுணரின் மரணம் தொடர்பில் கைது செய்யப்பட்ட நான்கு...

col.uni
இலங்கை

மூடப்படுகிறதா கொழும்பு பல்கலைக்கழகம்?

கொழும்பு பல்கலைக்கழக மாணவர்களுக்கும் டெங்கு காய்ச்சல் பரவியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. நேற்று ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த,...