image 379dde8029
அரசியல்இலங்கைசெய்திகள்

கண்ணீர்ப்புகை பிரயோகம் – தேசிய மக்கள் சக்தியினர் மருத்துவமனையில்

Share

தேர்தலை ஒத்திவைக்கும் சதிக்கு எதிராக “கொழும்பிற்கு எதிர்ப்பு” என்ற தலைப்பில் தேசிய மக்கள் சக்தி ஏற்பாடு செய்திருந்த ஆர்ப்பாட்டத்தின் மீது நீர்த்தாரை மற்றும் கண்ணீர்ப்புகை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

அங்கு காயமடைந்த சுமார் 20 ஆர்ப்பாட்டக்காரர்கள் தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர்கள் தெரிவித்தனர்.

கொழும்பு இப்பன்வல சந்தியில் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது பொலிஸார் நீர்த்தாரை மற்றும் கண்ணீர் புகை தாக்குதல் நடத்தினர்.

இந்த போராட்டத்திற்கு எதிராக கோட்டை பொலிஸாரும் மருதானை பொலிஸாரும் இணைந்து இரண்டு நீதிமன்ற உத்தரவுகளை பெற்றிருந்த நிலையில் இன்று பிற்பகல் கொழும்பு விஹார மகாதேவி பூங்காவிற்கு அருகாமையில் இந்த ஆர்ப்பாட்ட பேரணி ஆரம்பிக்கப்பட்டது.

அதன்படி, போராட்டத்தை கைவிடுமாறு முன் வந்த போராட்டக்காரர்களுக்கு பொலிஸார் அறிவித்திருந்தனர்

ஆனால், அவர்கள் வீதியை மறித்த போராட்டத்தில் ஈடுபட்ட போது அவர்களை கலைக்க பொலிஸார் நீர்த்தாரை மற்றும் கண்ணீர் புகை தாக்குதல் நடத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, தாமரை தடாகத்திற்கு அருகில் இருந்து நகர மண்டபம் வரையான வீதியில் கடும் போக்குவரத்து நெரிசல் நிலவுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

#SriLankaNews

Share

1 Comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மரதானையில் 826 லீற்றர் டீசல் பறிமுதல்: இருவர் கைது!

செல்லுபடியாகும் உரிமம் இல்லாமல் 826 லிட்டர் டீசலை பதுக்கி வைத்திருந்ததற்காக, டி.ஆர். விஜேவர்தன மாவத்தையிலுள்ள மரதானா...

world
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் ஜலசந்தி முடக்கம்: ஐநா பாதுகாப்பு சபையில் பஹ்ரைன் அதிரடித் தீர்மானம்!

உலகளாவிய எரிசக்தி வர்த்தகத்தின் மிக முக்கியப் பாதையான ஹோர்முஸ் ஜலசந்தியை (Strait of Hormuz) ஈரான்...

Untitled 92
செய்திகள்உலகம்

‘அவரை மீட்டுவிட்டோம்’: ஈரானில் அமெரிக்க விமானி அதிரடி மீட்பு!

ஈரானிய வான்பரப்பில் சுட்டு வீழ்த்தப்பட்ட அமெரிக்கப் போர் விமானத்திலிருந்து குதித்து மாயமாகியிருந்த விமானி, ஒரு துணிச்சலான...

Untitled 91
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

விவசாயிகளுக்கு மகிழ்ச்சி: புதிய உரம் ஒதுக்கீட்டு முறை அறிமுகம்!

இலங்கை சந்தையில் உரத்தின் விலையினைக் கட்டுப்படுத்தி, விவசாயிகளுக்கு நியாயமான விலையில் தட்டுப்பாடின்றி உரம் கிடைப்பதை உறுதி...