china 3
உலகம்செய்திகள்

மீண்டும் அதிகரிக்கும் கொரோனா – பாடசாலைகளுக்கு பூட்டு!

Share

சீனாவில் கொரோனா வைரஸ் பெருந்தொற்று 2019-ம் ஆண்டு டிசம்பரில் தோன்றி உலக நாடுகளைப் பதம் பார்த்தது. பல நாடுகள் அந்தத் தொற்றை கட்டுப்படுத்தினாலும், சீனாவில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட நிலையில் தொற்று பரவல் அதிகரித்துள்ளது.

குறிப்பாக உருமாறிய கொரோனா தாக்கம் அங்கு அதிகமாக இருக்கிறது. இந்த நிலையில் அங்கு கொரோனா வைரஸ் தொற்று மற்றும் பிற வைரஸ் நோய்கள் பரவலைத் தடுப்பதற்காக பல நகரங்களில் உள்ள பாடசாலைகள் இந்த வார தொடக்கத்தில் இருந்து மூடப்பட்டுள்ளன.

கடந்த வார இறுதியில் இ-காமர்ஸ் மையமான ஹாங்ஜோவில் ஒரே வகுப்பறையில் இரண்டாம் வகுப்பு படிக்கும் 10 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது,

இதனைத் தொடர்ந்து உள்ளூர் கல்வி அதிகாரிகள் திங்கட்கிழமை முதல் நான்கு நாட்களுக்கு வகுப்புகளை நிறுத்துமாறு அறிவுறுத்தியுள்ளனர். அங்கு முதல் முறையாக மாணவர்களுக்கு தொற்று ஏற்பட்டிருக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதே போன்று தொழில் நகரமான ஷாங்காயில் ஒரே நேரத்தில் 4 மாணவர்களுக்கு வைரஸ் காய்ச்சல் இருப்பது கண்டறியப்பட்டது. மேலும் பலருக்கு இதே போன்ற அறிகுறிகள் தோன்றியதை அடுத்து, ஷாங்காய் ஆரம்பப் பள்ளி வகுப்பில் நேரில் கற்பிப்பதை நிறுத்தி உள்ளனர்.

ஜேஜியாங் மாகாணம், சீன தலைநகர் பீஜிங் மற்றும் அருகிலுள்ள நகரமான தியான்ஜின் முழுவதும் உள்ள மற்ற பள்ளிகளிலும் காய்ச்சல் பாதிப்புகள் காரணமாக வகுப்புகள் நிறுத்தப்பட்டுள்ளன.

#world

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 122
செய்திகள்உலகம்

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலை $100-ஐத் தாண்டியது: ஹோர்முஸ் ஜலசந்தியை முற்றுகையிடுகிறது அமெரிக்கா!

ஈரானுடனான அமைதிப் பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, ஹோர்முஸ் ஜலசந்தி (Strait of Hormuz) வழியாகச் செல்லும்...

world 121
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இன்று மாலை நாட்டின் பல பகுதிகளில் கனமழை: பொதுமக்கள் அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை!

இலங்கையின் பெரும்பாலான பகுதிகளில் இன்று (ஏப்ரல் 13, 2026) பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழை...

world 120
செய்திகள்உலகம்

லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்: அவசர உதவிகளை அறிவித்தது ஈராக்!

லெபனான் மீது இஸ்ரேல் நடத்திய சமீபத்திய தாக்குதல்களைத் தொடர்ந்து, ஈராக் பிரதமர் முகமது ஷியா அல்-சுடானி,...

world 119
செய்திகள்இலங்கைபிராந்தியம்

புத்தாண்டு வழிபாட்டிற்காக நாளை இரவு முழுவதும் திறக்கப்படும் ருவன்வெலி மகா சேயா!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு ஆசிகளைப் பெற வரும் பக்தர்களுக்காக, அனுராதபுரத்தில் உள்ள வரலாற்றுச்...