image 8db48bb61f
அரசியல்இலங்கைசெய்திகள்

சாகா வரம் பெற்றவர் தலைவர் பிரபாகரன்!!

Share

விடுதலைப் புலிகள் தலைவருடன் பழநெடுமாறன் 40 வருடகாலமாக  நெருங்கிய தொடர்புடையவர் அவருக்கு மேல் இடத்தில் இருந்து அனுமதி வந்திருக்கலாம். அதேவேளை, கிருஷ்ணர் வரும் பெற்றவர் தலைவர். அவருக்கு சாவு என்றுமே இல்லை  அவர் மீண்டும் மக்கள் மத்தியில் வருவாராக இருந்தால் அது ஜனநாயக ரீதியில் எமது மக்களின் இனவிடுதலைக்கான முன்னெடுப்புகளுடன் வெளிநாட்டு மத்தியஸ்தத்துடனேயே அவர் தோற்றம் பெறுவார் என  புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப் புலிகள் கட்சி தலைவர் கே. இன்பராசா தெரிவித்தார்.

அம்பாறை காரைதீவில்   வெள்ளிக்கிழமை (17) இடம்பெற்ற விசேட ஊடக சந்திப்பில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தற்போழுது பெசும்பொருளாக இருக்கும் விடுதலைப் புலிகளின் தேசிய தலைவர் பிரபாகரன் தொடர்பாக பழ.நெடுமாறன் இவ்வாறான செய்தியை விட்டிருப்பதென்பது தமிழ் மக்கள் மத்தியில் மாத்திரமல்ல தலைவர் இருக்கின்றாரா? இல்லையா? என்ற கேள்வியுடன் ஒட்டுமொத்த உலகமே உற்று நோக்கி பார்த்துக் கொண்டிருக்கின்றது என்றார்.

இன்று தலைவர் தொடர்பான விடயத்தில் கடவுள் இருக்கின்றாரா? இல்லையா என்ற கேள்விக்கு எத்தகைய பதில் கிடைக்குமோ அதே பதில்தான் தலைவரின் விடயத்திலும் இருக்கின்றது. அனைத்து மதங்களும் கடவுள் இருக்கின்றார் என்ற ஏதோவொரு நம்பிக்கையில் தான் செயற்படுகின்றன என்றார்.

அதேபோல யேசுநாதர் பிறந்தார் மக்களுக்காக கஸ்டப்பட்டார் அவரை கடவுளாக மக்கள் வனங்கி கொள்கின்றனர் அதே மாதிரி கிருஷ்ணன் பிறந்த வரலாறு புத்தர் பிறந்த வரலாறு இருக்கின்றது. அதுபோல தேசிய தலைவரின் வரலாறு இருக்கின்றது. எங்கள் தேசியத் தலைவர் ஒட்டு மொத்த போராளிகள் மட்டுமல்ல எமது மக்களின் இதயத்தில் அன்று தொட்டு இன்று மட்டுமல்ல என்றும்  வாழ்ந்து கொண்டிருக்கின்றார் அவர் இல்லை என்று சொல்வதற்கு எவருக்கும் அருகதை இல்லை என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

இன்று நடக்கின்ற விடயங்கள் எல்லாம் எமது தலைவர்களால் தீர்க்க தரிசனமாக 1990களிலேயே சொல்லப்பட்டவை. ஓரு கட்டத்தில் எமது போராட்டம் பல நாடுகளின் உதவியுடன் நசுக்கி ஆயுதம் மௌனிக்கப்படும் பின்னர் ஒரு குறிப்பிட்ட காலம் தலைவர் இருக்கின்றாரா? இல்லையா? என்ற சர்ச்சை வரும் அக்காலத்தின் பின் எமது தலைவரின் பெயர் ஏதொவொரு வகையில் வெளிவரும் அந்த சமயத்தில் சர்வதேசத்தின் மத்தியஸ்தத்துடன் வடக்கு, கிழக்கு இணைந்த தீர்வொன்று தலைவர் ஊடாக பெற்றுக் கொடுக்கப்படும் என அன்று கபிலஅம்மான் எமக்கு படம் கற்பிக்கும் போது  தீர்கத்தரிசனமாக சொல்லப்பட்டது என்றும் இன்பராசா தெரிவித்தார்.

தலைவர் இல்லை என்று அரசாங்கம் சொல்லட்டும். இன்று காணாமல் ஆக்கப்பட்டவர்கள் இல்லை, கைது செய்யப்பட்டவர்கள் இல்லை என்றெல்லாம் சொன்னார்கள். அவர்களில் சிலர் தற்போது வந்தார்கள், கைது செய்யப்பட்டவர்கள் விடுவிக்கப்பட்டும் இருக்கின்றார்கள் என்றார்.

ஒரு விடுதலையை நோக்கிப் போராடிய இயக்கம். போராட்டம் மௌனிக்கப்பட்டு இன்று பதின்மூன்று வருடங்களாக எந்தவித ஆயுதமேந்திய போராட்டங்களையும் மேற்கொள்ளாத நிலையில் எமது இயக்கத்தின் போராட்டத்தை சர்வதேசம், ஐக்கிய நாடுகள் சபை அங்கிகரிக்க வேண்டும். அந்த இயக்கம் எதற்காகப் போராடியதோ அந்த உரிமையைக் கொடுக்க வேண்டும் அந்த நியதி இருக்கின்றது என்றும் இன்பராசா மேலும் தெரிவித்தார்.

போராட்டம் மௌனிக்கப்பட்ட பின்னர் இன்றுவரை விடுதலைப் புலிகள் ஆயுத ரீதியில் இயங்கவில்லை என்ற ரீதியில் நாங்கள் நேர்மையானவர்கள், நேர்த்தியானவர்கள் என்ற அடிப்படையைப் புரிந்து கொண்டு எமது தேசியத் தலைவரின் கோட்பாட்டின் கீழ் ஜனநாயக ரீதியில் அனைத்து நாடுகளும் இணைந்து தலைவரின் வழிநடத்தலில் வடக்கு, கிழக்கு இணைந்த தாயகத்தை அவரின் கைகளில் வழங்கும் என நாங்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றோம் என்றும் இன்பராசா தெரிவித்தார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
MediaFile 11
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

கிராம அலுவலர் மீதான தாக்குதல் வழக்கு: நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் ஆட்பிணையில் விடுதலை!

கிளிநொச்சி – பரந்தன் பகுதி கிராம அலுவலர் மீது தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படும் வழக்கில், நாடாளுமன்ற...

images 6 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இயக்கச்சியில் விபத்து: மாற்றுத்திறனாளியை மோதிவிட்டுத் தப்பியோடிய வாகனம் – ஒருவர் படுகாயம்!

பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இயக்கச்சி பகுதியில், மாற்றுத்திறனாளி ஒருவரின் மோட்டார் வண்டியைப் பின்னால் இருந்து மோதி...

MediaFile 10 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ராஜகிரியவில் 300 புதிய வீட்டு அலகுகள்: தடைப்பட்டிருந்த திட்டத்தை மீண்டும் ஆரம்பிக்க அமைச்சரவை அனுமதி!

ராஜகிரிய, ஒபேசேகரபுர பகுதியில் நீண்டகாலமாகத் தடைப்பட்டிருந்த 300 வீட்டு அலகுகளை நிர்மாணிக்கும் பணிகளைப் புதிய ஒப்பந்தக்காரர்...

Dark AI e1756568647595
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தெஹிவளை ஹோட்டல் உரிமையாளர் கொலை: AI தொழில்நுட்பத்தில் உருவான சந்தேக நபரின் புகைப்படம் வெளியீடு!

தெஹிவளை பகுதியில் ஹோட்டல் உரிமையாளர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரை அடையாளம்...