சிறுபான்மை என்று கூறினால் செருப்பால் அடிப்பேன்! கொந்தளித்த சீமான்
இந்தியாஇலங்கைசெய்திகள்

சொல்லிவிட்டு வருபவர் அல்ல எங்கள் அண்ணன்!!

Share

பதுங்கி இருப்பவர் அல்ல எண்கள் அண்ணன். நாட்டை விட்டு போக மாட்டேன் என்று வீரமாக சண்டை புரிந்தவர் எங்கள் அண்ணன். என சீமான் தெரிவித்துள்ளார்.

விடுதலை புலிகள் இயக்க தலைவர் பிரபாகரன் உயிருடன் இருப்பதாக நெடுமாறன் கூறிய தகவல் பற்றி சீமான் மேலும் தெரிவிக்கையில்,

என்னிடம் பதில் இல்லை, சில கேள்விகள் தான் இருக்கிறது. என் தம்பி பாலசந்திரனை பலி கொடுத்துவிட்டு என் அண்ணன் பத்திரமாக தப்பி சென்றிருப்பார் என்று நீங்கள் நினைக்கிறீர்களா? எந்த சூழ்நிலையிலும் இந்த நாட்டை விட்டு போக மாட்டேன் என்று வீரமாக சண்டை புரிந்தவர் எங்கள் அண்ணன்.

தன் உயிரை மட்டும் தற்காத்துக் கொண்டு தப்பி செல்லும் கோழை என்று நினைக்கிறீர்களா? போர் புரிந்து ஒரு பெரிய பேரழிவை சந்தித்துள்ளோம். 15 ஆண்டுகள் பத்திரமாக ஒரு இடத்தில் பதுங்கி பேசாமல் இருப்பார் என் அண்ணா என்று நீங்கள் நினைக்கிறீர்களா?

சொல்லிவிட்டு வருபவர் அல்ல எங்கள் அண்ணன் வந்துவிட்டு தான் சொல்லுவார். அதுதான் அவரின் பழக்கம். தேவையில்லாமல் குழம்ப வேண்டாம். அவர்கள் கூறியது போல் ஒரு நாள் மக்கள் முன் தோன்றுவார் என்று கூறியதுபோல் தோன்றும்போது தோன்றட்டும்.

ஐயா பெரியாரிடம் கடவுள் இல்லை இல்லை என்று சொல்லி கொண்டிருக்கிறீர்களே திடீர் என்று கடவுள் நேரில் வந்தால் என்ன செய்வீர்கள் என்று கேட்பவருக்கு அவர் அன்றுமுதல் கடவுள் இருக்கிறார் என்று சொல்லுவோம். ஐயா நெடுமாறன் கூறியவாறு எங்கள் அண்ணன் நேரில் வந்துவிட்டால், இதை பற்றி வந்தவுடன் பேசுவோம். – என்றார்.

#SriLankaNews #India

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...