billgates
உலகம்செய்திகள்

தோழியுடன் டேட்டிங்! – விரைவில் இரண்டாம் திருமணம்?

Share

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இணை நிறுவனரும், உலக பணக்காரர்களில் ஒருவருமாக திகழ்ந்து வருபவர் பில் கேட்ஸ். இவரது முன்னாள் மனைவி மெலிண்டா. இவர்களுக்கு ஜெனீபர் (வயது 26 ) என்ற மகனும் ரோரி (23) மற்றும் போபே (20) என்ற 2 மகள்களும் உள்ளனர்.

இந்தநிலையில் இவர்களுக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் கடந்த 2021-ம் ஆண்டு விவாகரத்து செய்ய முடிவு செய்தனர். அதன் பிறகு அவர்கள் விவாகரத்து பெற்றனர். இதனால் அவர்களது 27 ஆண்டு திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்தது.

இந்த நிலையில் பவுலா ஹர்ட் என்ற விதவை பெண்ணுடன் பில் கேட்ஸ் தற்போது ஊர் சுற்றுவதாக தகவல் வெளியாகி உள்ளது. பவுலா ஹர்ட்டின் கணவர் மார்க் ஹர்ட் பிரபல ஆரக்கிள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக பதவி வகித்தவர். இந்த தம்பதிக்கு கேத்ரின், உள்பட 2 மகள்கள் உள்ளனர். கடந்த 2019-ம் ஆண்டு மார்க் மரணம் அடைந்து விட்டார்.

இந்த சூழ்நிலையில் தான் பவுலா ஹர்டுக்கு பில்கேட்சுடன் நட்பு ஏற்பட்டது. இதையடுத்து அவர்கள் ஒன்றாக ஊர் சுற்ற தொடங்கினார்கள். கடந்த மாதம் நடந்த ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் போட்டியை ஒன்றாக அமர்ந்து கண்டுகளித்தனர். இது சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இதே போல பல இடங்களுக்கும் அவர்கள் ஜோடியாக சென்றுவருவதாக தகவல் வந்த வண்ணம் உள்ளது.

டென்னிஸ் மீது அவர்கள் வைத்து இருந்த ஆர்வம் தான் 2 பேரையும் காதலில் விழ வைத்து இருப்பதாக சொல்லப்படுகிறது. இதனை 2 பேருமே இதுவரை மறுக்கவில்லை. பவுலா ஹர்ட் தொழில் மேலாண்மை பட்டப்படிப்பு முடித்து உள்ளார், அவர் விற்பனை மற்றும் நிர்வாக துறையில் நீண்ட காலம் பணியாற்றிவர் என்பது குறிப்பிடத்தக்கது.

#world

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Murder Recovered Recovered 18
சினிமாசெய்திகள்

லெட்டர் எழுதி வைத்துவிட்டு வீட்டிலிருந்து வெளியேறினேன்.. விஜய் சொன்ன சுவாரசிய தகவல்

நடிகர் விஜய் தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறார். இவர் நடிப்பில் அடுத்ததாக...

Murder Recovered Recovered 17
சினிமாசெய்திகள்

கோமாவில் இருந்த பிரபல சீரியல் நடிகையின் தற்போதைய நிலை… இப்படி ஆகிடுச்சா?

ஐடி வேலை பார்த்து பின் விஜேவாக கேமரா முன் வந்து சீரியல் மற்றும் சினிமா நடிகையாக...

Murder Recovered Recovered 16
சினிமாசெய்திகள்

வெற்றிமாறன் படத்தில் இரட்டை வேடம்.. சிம்பு அடுத்த படத்தின் மாஸ் அப்டேட்

நடிகர் சிம்பு, தமிழ் சினிமாவில் ஏராளமான ரசிகர்கள் கூட்டம் வைத்திருக்கும் பிரபலம். இவர் நடிப்பில் சமீபத்தில்...

Murder Recovered Recovered 15
சினிமாசெய்திகள்

கட்டடத் தொழிலாளியாகவே மாறிய தனம் சீரியல் நடிகை… அவரே வெளியிட்ட BTS வீடியோ

விஜய் தொலைக்காட்சியில் கடந்த சில மாதங்களுக்கு முன் புதிய தொடராக ஒளிபரப்பாக தொடங்கிய சீரியல் தனம்....