Gotabaya Rajapaksa
அரசியல்இலங்கைசெய்திகள்

மாளிகையில் இருந்த பணம் எனது சொந்த பணமே!!!

Share

கோட்டை ஜனாதிபதி மாளிகையில் போராட்டக்காரர்களால் கண்டுபிடிக்கப்பட்டு கோட்டை பொலிஸாரிடம் கையளிக்கப்பட்ட ஒரு கோடியே எழுபத்தி எட்டு இலட்சத்து ஐம்பதாயிரம் ரூபா பணமானது தனது சொந்தப் பணம் எனவும், அதனை நாட்டின் ஏழை மக்களுக்கு பகிர்ந்தளிக்க தயாராக இருந்ததாகவும் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வாக்குமூலம் வழங்கியுள்ளதாக குற்றப்புலனாய்வுத் திணைக்களம் நேற்று (08) கோட்டை நீதவான் திலின கமகேவிடம் தெரிவித்துள்ளது.

எனவே தற்போது நீதிமன்ற காவலில் உள்ள பணத்தை முன்னாள் ஜனாதிபதியிடம் ஒப்படைக்க உத்தரவிடுமாறு கோட்டாபய ராஜபக்ச சார்பில் ஆஜரான சட்டத்தரணி ஹரிகுப்த சேனாதீர நீதிமன்றில் கோரிக்கை விடுத்தார்.

அவர் வழங்கிய வாக்குமூலத்தின்படி, முன்னாள் ஜனாதிபதி எவ்வாறு பணம் சம்பாதித்தார் அல்லது அவருக்கு பணம் எவ்வாறு வழங்கப்பட்டது என்பது குறித்து எதுவும் வெளியிடப்படவில்லை.

பணமோசடி தடுப்புச் சட்டம் அல்லது இலஞ்ச ஊழல் சட்டத்தின் கீழ் முறையான விசாரணை நடத்தாமல், அவருக்கு பணத்தை திருப்பித் தருமாறு கோருவதற்கு, எதிர் தரப்பு சார்பில் ஆஜரான சிரேஷ்ட ஜனாதிபதி சட்டத்தரணி ரியன்சி அர்சகுலரத்ன மற்றும் ஏனைய சட்டத்தரணிகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர்.

முன்னாள் ஜனாதிபதி நீதிமன்றத்தில் ஆஜராகாத பட்சத்தில் மற்றும் பணம் எவ்வாறு பெறப்பட்டது என்பதை வெளிப்படுத்தாத பட்சத்தில் அவரிடம் பணத்தை வழங்குமாறு உத்தரவிட வேண்டாம் எனவும் எதிர் தரப்பின் சட்டத்தரணிகள் நீதிமன்றில் கோரிக்கை விடுத்துள்ளனர்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...