Power cut
இலங்கைசெய்திகள்

இன்றும் மின்வெட்டு!!

Share

க.பொ.த உயர் தரப் பரீட்சைகள் இன்று முதல் ஆரம்பமாகியுள்ள நிலையில், பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களின் நலன் கருதி இரவு 7.00 மணிக்கு பின்னர் மின்வெட்டை அமுல்ப்படுத்த வேண்டாமென இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு பரிந்துரைத்திருந்த போதிலும், இன்றும் வழமை போன்று பகல் வேளையில் 1 மணித்தியாலமும், இரவு வேளையில் 1 மணித்தியாலம் 20 நிமிடங்களும் மின்வெட்டு அமுல்ப்படுத்தப்படும் என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.

மின் உற்பத்தி தொடர்பில் தற்போது நிலவும் நெருக்கடி நிலை காரணமாக இந்த மின்வெட்டு காலத்தை தொடர வேண்டியுள்ளதாக மின்சார சபை அறிவித்துள்ளது. மின்சார உற்பத்திக்கு அதிகளவு நிதி தேவைப்படுவதாகவும், தற்போதைய சூழலில் மின்சார சபையிடம் அந்தளவு நிதி இல்லை எனவும், அவசியமான நிதி வழங்கப்பட்டால், மின்வெட்டை அமுல்ப்படுத்துவதை நிறுத்துவதாகவும் தெரிவித்துள்ளது.

இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவருக்கும், ஜனாதிபதி அடங்கலான அமைச்சர் மற்றும் இதர மின்சார சபை அதிகாரிகளுக்கிடையே மின் கட்டண அதிகரிப்பு தொடர்பில் முரண்பாடு எழுந்துள்ளமை, இந்த தீர்மானத்தில் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கலாம் எனவும், இதனால் தமது எதிர்கால வாழ்க்கையை தீர்மானிக்கும் முக்கியமான பரீட்சையில் தோற்றும் மாணவர்களுக்கு இந்த மின்வெட்டு அமுலப்படுத்தப்படுவதானது பரீட்சைக் காலத்தில் மன அழுத்தத்தை தோற்றுவித்துள்ளதாகவும் பொது மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Untitled 24
செய்திகள்உலகம்

ஈரான் போர் நிறுத்தம் கோருகிறது: ஹோர்முஸ் ஜலசந்தி திறக்கப்படும் வரை தாக்குதல் தொடரும் என டிரம்ப் எச்சரிக்கை!

ஈரானின் புதிய தலைமை (New Regime) அமெரிக்காவிடம் போர் நிறுத்தம் கோரியுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட்...

Untitled 23
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாளை நாடு தழுவிய அளவில் மருத்துவர்கள் வேலைநிறுத்தம்: 24 மணி நேரப் போராட்டத்திற்கு GMOA அழைப்பு!

நாட்டிலுள்ள அனைத்து அரச மருத்துவமனைகளையும் தழுவிய ரீதியில் நாளை (ஏப்ரல் 02, 2026) வியாழக்கிழமை காலை...

Untitled 22
செய்திகள்இந்தியா

மத்திய கிழக்கு போர் எதிரொலி: இந்தியாவில் ஏடிஎஃப் மற்றும் வர்த்தக எரிவாயு விலைகள் உயர்வு!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வரும் போர் பதற்றம் காரணமாக உலகளாவிய எரிசக்தி செலவுகள் அதிகரித்துள்ள...

Untitled 21
செய்திகள்உலகம்

வானில் இன்று தோன்றும் ‘இளஞ்சிவப்பு நிலவு’: 50 ஆண்டுகளுக்குப் பின் நிலவுக்கான மனிதப் பயணம் தொடக்கம்!

புதிய வசந்த காலத்தின் வருகையை அறிவிக்கும் வகையில், ஏப்ரல் மாதத்தின் முதல் முழு நிலவான ‘இளஞ்சிவப்பு...