image 2497bbeec6
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

அம்பேவெல பண்ணைக்கு 30 ஏக்கர்

Share

அம்பேவெல பண்ணைக்கு அருகாமையில் கைவிடப்பட்ட நிலையில் காணப்பட்ட 30 ஏக்கர் காணியை உடனடியாக அம்பேவெல பண்ணைக்கு வழங்கி அதன் அபிவிருத்திக்குத் தேவையான வசதிகளை முன்னெடுக்குமாறும், அதனை மேய்ச்சல் நிலமாகப் பேணி, கறவை மாடுகளின் உணவுத் தேவையை வழங்கும் கட்டமைப்புடன் இணைக்குமாறும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க   நுவரெலியா மாவட்டச் செயலாளர் மற்றும் ஆணையாளருக்கு பணிப்புரை விடுத்தார்.

அம்பேவெல பண்ணைக்குச் சொந்தமான ‘யுனைடட் டெய்ரீஸ் லங்கா லிமிடட் அம்பேவெல’ புதிய பிரிவுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க   நேற்று (27) மேற்கொண்ட கண்காணிப்பு விஜயத்தின் போதே அவர் மேற்படி அறிவுறுத்தல்களை வழங்கினார்.

அம்பேவெல பண்ணையின் பால் உற்பத்தித் துறையில் எட்டப்பட்டுள்ள முறையான வளர்ச்சியைப் பாராட்டிய ஜனாதிபதி, இது ஏனைய பண்ணைகளுக்கு முன்னுதாரணமாகத் திகழ்வதாகத் தெரிவித்தார். இலங்கையிலுள்ள பல்கலைக்கழக மாணவர்களின் ஆராய்ச்சி நடவடிக்கைகள் மற்றும் அனுபவத்திற்காக இப்பண்ணையை திறந்து வைப்பதுடன் அதற்குத் தேவையான பின்புலத்தை தயார்படுத்துமாறும் ஜனாதிபதி பணிப்புரை விடுத்தார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Untitled 68
செய்திகள்இலங்கைபிராந்தியம்

காலி – தெலிக்கடையில் பயங்கரம்: ஆணும் பெண்ணும் வெட்டிக் கொலை – ஓய்வுபெற்ற இராணுவ வீரர் கைது!

காலி, தெலிக்கடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் இன்று (ஏப்ரல் 03, 2026) அதிகாலை இடம்பெற்றதாகக் கூறப்படும்...

Untitled 67
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கைச் சுற்றுலாவில் 19.7% சரிவு: மார்ச் மாதத்தில் வருகை தந்த பயணிகளின் எண்ணிக்கை வெளியீடு!

இலங்கைச் சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை (SLTDA) வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையின்படி, 2026 மார்ச் மாதத்தில்...

Untitled 66
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சம்பா அரிசி தட்டுப்பாட்டுக்குத் தீர்வு: பொன்னி மற்றும் கீரி பொன்னி இறக்குமதிக்கு அரசாங்கம் அனுமதி!

இலங்கையில் நிலவும் சம்பா மற்றும் கீரி சம்பா அரிசி தட்டுப்பாட்டைப் போக்கி, சந்தையை நிலைப்படுத்துவதற்காக விசேட...

Untitled 65
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சிலாபத்தில் பாரிய இணையவழி நிதி மோசடி: 147 வெளிநாட்டுப் பிரஜைகள் அதிரடி கைது!

இலங்கையின் சிலாபம், இரணாவில பகுதியில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்து, சர்வதேச ரீதியிலான ஒழுங்கமைக்கப்பட்ட...