KIM JONG
உலகம்செய்திகள்

யாரும் சிரிக்கக்கூடாது, சத்தமாக அழக்கூடாது – கிம் ஜாங் உன் உத்தரவு

Share

சர்வாதிகார சட்டங்கள் அமுலில் உள்ள வடகொரியாவில் மக்கள் சிரிப்பதற்கும் மது அருந்துவதற்கும் தடை விதித்து அதிபர் கிம் ஜாங் உன் உத்தரவிட்டுள்ளார்.

அவரது தந்தையும் வடகொரியாவின் முன்னாள் அதிபருமான கிம் ஜாங் இல் நினைவு தினத்தை முன்னிட்டு இந்த தடை உத்தரவு அமுல்படுத்தப்பட்டுள்ளது.

கிம் ஜாங் இல்-ன் 11வது நினைவு தினம் கடந்த 17ம் தேதி கடைப்பிடிக்கப்பட்டது. நினைவுதினத்தை முன்னிட்டு, 11 நாட்களுக்கு அந்நாட்டில் துக்கம் அனுசரிக்கப்படுகிறது. இந்த நாட்களில் மக்கள் யாரும் சிரிக்கக் கூடாது, மது அருந்தக் கூடாது, கடைகளுக்குச் சென்று பொருள்கள் வாங்கக் கூடாது என்று கடுமையான தடை விதிக்கப்பட்டுள்ளது.

அது மட்டுமல்ல, இந்த 11 நாள்களில், குடும்பத்தில் யாரேனும் இறந்துவிட்டால் கூட, அவரது உறவினர்கள் சத்தம் போட்டு அழக்கூடாது, மெதுவாகவே அழவேண்டும். இந்த தடையை மீறுவோருக்கு மரண தண்டனை விதிக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஒருவேளை, இந்த 11 நாள்களுக்குள் யாரேனும் பிறந்திருந்தால் அவர்கள் தங்கள் வாழ்நாள் முழுக்க தங்களது பிறந்தநாளைக் கூட கொண்டாட முடியாது என்று அந்நாட்டு ஊடகங்கள் மேற்கோள்காட்டியுள்ளன.

#world

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Recent Posts

தொடர்புடையது
22
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சம்பள உயர்வால் மகிழ்ச்சி: ஹப்புத்தளை தோட்டத் தொழிலாளர்கள் பாற்சோறு சமைத்துக் கொண்டாட்டம்!

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்ட சம்பள உயர்வுக்காக, அரசாங்கத்திற்குத் தமது நன்றிகளையும் மகிழ்ச்சியையும் தெரிவிக்கும் வகையில் ஹப்புத்தளை...

20
செய்திகள்அரசியல்இலங்கை

விசாரணையை அரசியலாக்க வேண்டாம்: சுரேஷ் சலே கைது குறித்து கத்தோலிக்க திருச்சபை விசேட அறிக்கை!

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் தொடர்பாக முன்னாள் அரச புலனாய்வுப் பிரிவு (SIS) பணிப்பாளர் சுரேஷ்...

18
செய்திகள்இந்தியா

இந்தியப் பயணிகளை ஈர்க்க ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் அதிரடித் திட்டம்: வாராந்திர விமானங்கள் அதிகரிப்பு மற்றும் புதிய நகரங்களுக்கு சேவை!

டெல்லியில் நடைபெற்று வரும் SATTE 2026 சுற்றுலா கண்காட்சியின் ஒரு பகுதியாக நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில்,...