hair
அழகுக் குறிப்புகள்பொழுதுபோக்கு

கூந்தல் உதிர்வு, இளநரை பிரச்சனையை தீர்க்க வீட்டிலேயே தயாரிக்கலாம் எண்ணெய்

Share

தேவையான பொருட்கள்

தேங்காய் எண்ணெய் – 500 மி

நல்லெண்ணெய் – 100 மி

கரிசலாங்கண்ணி இலைகள் – 2 கைப்பிடி

அரைக்க வேண்டியவை

சின்ன வெங்காயம் – 20

செம்பருத்தி இலை – 2 கைப்பிடி

கறிவேப்பிலை – 2 கைப்பிடி

கருஞ்சீரகம் – 2 ஸ்பூன்

மருதாணி – 1 கைப்பிடி

நெல்லிக்காய் – 10

வெந்தயம் – 2 ஸ்பூன்

கற்றாழை – 2 இதழ்

செய்முறை

அரைக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை ஒவ்வொன்றாக அரைத்து விழுதாக எடுத்துக் கொள்ளவும்.

அடுப்பில் வாணலியை வைத்து 3 எண்ணெயை ஊற்றி மிதமாக சூடானதும் அரைத்து வைத்துள்ள விழுதை சேர்த்து நன்கு கலக்கவும்.

அடிபிடிக்காமல் இருக்க பொறுமையாக சிறிது நேர இடைவெளியில் கிளறிக் கொண்டே இருக்கவும். நுரை அடங்கும் வரை காய வைத்து இறக்கி ஆற விடவும்.

இப்போது எண்ணெய் நன்கு கரும்பச்சை நிறத்தில் இருக்கும். இதனை பாட்டிலில் சேகரித்து தினமும் பயன்படுத்தி வர கூந்தல் நன்கு வளர்ந்து இளநரை உள்ளிட்ட பிரச்சனைகள் நீங்கும்.

சளி பிடிக்கும் பிரச்சனை இருப்பவர்கள் கற்றாழை பயன்படுத்துவதை தவிர்த்து விடவும்.

#LifeStyle

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
25 69436caf373f0
பொழுதுபோக்குசினிமா

நாளை வெளியாகும் ‘அவதார் 3’: முன்பதிவில் மந்தமான நிலை; ரூ. 13 கோடி மட்டுமே வசூல்!

ஜேம்ஸ் கேமரூனின் பிரம்மாண்ட இயக்கத்தில் உருவான ‘அவதார்’ வரிசையின் மூன்றாவது பாகமான ‘அவதார்: பயர் அண்ட்...

karthik siva kumar 085421709 original sixteen to nine
சினிமாபொழுதுபோக்கு

கார்த்தியின் ‘வா வாத்தியார்’ பட ரிலீஸில் நீடிக்கும் சிக்கல்: ஞானவேல்ராஜாவின் மேல்முறையீட்டைத் தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்!

நடிகர் கார்த்தி நடித்து, நலன் குமாரசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘வா வாத்தியார்’ திரைப்படத்தின் ரிலீஸ் தொடர்பான...

125520533
சினிமாபொழுதுபோக்கு

98வது ஒஸ்கர் விருதுப் போட்டி: இந்தியத் திரைப்படம் ‘Home Bound’ தகுதிப் பட்டியலில் தேர்வு!

திரையுலகின் உயரிய விருதான 98வது ஒஸ்கர் அகாடமி விருது விழா அடுத்தாண்டு மார்ச் 15 ஆம்...

image 24983 1
சினிமாபொழுதுபோக்கு

அழகாகப் பேசுபவர்கள் எல்லாம் முதல்வர் ஆக முடியாது: சென்னையில் கிச்சா சுதீப்பின் அதிரடிப் பதில்!

கன்னடத் திரையுலகின் முன்னணி நட்சத்திரமான கிச்சா சுதீப், தான் நடித்துள்ள ‘மார்க்’ (Max) திரைப்படத்தின் புரமோஷன்...