image 29312715b6
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

16 நாட்களின் பின் மாயமான மீனவர் மீட்பு

Share

திருகோணமலை கடற்றொழில் துறைமுகத்தில் இருந்து கடந்த நவம்பர் மாதம் 26ஆம் திகதி சென்ற படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளான நிலையில், அதில் பயணித்த மீனவரொவருவரை 16 நாட்களின் பின்னர், இலங்கை கடற்படையினர் நேற்று (11) மீட்டனர்.

5 மீனவர்களுடன் பயணித்த “ஹிம்சரா” பல நாள் மீன்பிடி இழுவை படகு பாதகமான காலநிலையை தொடர்ந்து சங்கமன் கந்த முனையிலிருந்து 46 கடல் மைல் தொலைவில் படகு கவிழ்ந்தது.

அனர்த்தம் பற்றிய தகவல் கிடைத்ததும், கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்னவின் பணிப்புரையின் பேரில் கடற்படையினர் தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

அதன்படி, கடற்படையினர் உள்ளூர் மீன்பிடி படகின் உதவியுடன் கவிழ்ந்த விசைப்படகில் இருந்து மூன்று மீனவர்களை மீட்டதுடன், காணாமல் போன இரண்டு மீனவர்களைக் கண்டறியும் நடவடிக்கையை மேற்கொண்டடிருந்தனர்.

இந்நிலையிலேயே குறித்த மீனவர் நேற்றையதினம் மீட்கப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை அறிவித்துள்ளது.

மீன்பிடி மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களத்தின் ஊடாக தகவலை உறுதிப்படுத்திய பின்னர், மீனவர்களை மீட்பதற்காக தென்கிழக்கு கடற்பரப்பில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த எஸ்எல்என்எஸ் ரணரிசியை கடற்படையினர் அனுப்பியுள்ளனர்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
dead body
இலங்கை

பாடசாலை செல்லும்போது ஆறு வயது பாலகிக்கு நேர்ந்த கதி.

இன்று, மாத்தறை, திக்வெல்ல – கொடஉட பகுதியில் 6 வயது சிறுமி ஒருவர் தனது தாயார்...

Lanka Turkey
இலங்கை

துருக்கித் தூதுவரை சந்தித்த சர்வஜன அதிகாரம் கட்சியின் தலைவர்.

சர்வஜன அதிகாரம் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினர் திலித் ஜயவீர மற்றும் சர்வஜன அதிகார கட்சியின்...

Fire Breaks Out Factory In Katuwana
இலங்கை

அடையாளம் காணப்பட முடியாத வகையில் உடலங்கள் – ஹோமாகம, கட்டுவான கைத்தொழில் வலயத்தில் தீ.

ஹோமாகம, கட்டுவான கைத்தொழில் வலயத்தில் அமைந்துள்ள தலைக்கவசம் தயாரிக்கும் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தவர்கள்...

Basil Rajapaksa
இலங்கை

கடும் எச்சரிக்கையுடன் பசில் ராஜபக்சவுக்கு மீண்டும் பிறப்பிக்கப்பட்ட பிடியாணை.

முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்சவுக்கு எதிராக, மாத்தறை எளியகந்த பகுதியில் உள்ள ஒன்றரை...