vijay STR
சினிமாபொழுதுபோக்கு

‘வாரிசு’ பாட்டு மட்டும் பாடல சிம்பு – ரசிகர்களுக்கு செம டுவிஸ்ட்

Share

தளபதி விஜய் நடித்த ’வாரிசு’ திரைப்படம் வரும் பொங்கல் தினத்தில் வெளியாக உள்ளது என்பதும் இந்த படத்திற்கான புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது தெரிந்ததே.

ஏற்கனவே இந்தப் படத்தில் இரண்டு பாடல்கள் வெளியாகி இரண்டு பாடல்களும் சூப்பர் ஹிட்டாகி உள்ளன என்றும் பார்வையாளர்கள் எண்ணிக்கையில் பெரும் சாதனை செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் வெளியான ’வாரிசு’ படத்தின் ‘தீ’ பாடல் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது என்பதும் சிம்பு பாடிய இந்த பாடலை சிம்பு ரசிகர்கள் வைரலாக்கி உள்ளனர் என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் ’வாரிசு’ படத்தில் சிம்பு பாடியது மட்டுமின்றி ஒரு சிறிய கேரக்டரில் நடித்து இருப்பதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. சிம்பு நடிக்கும் காட்சியில் விஜய்யும் இருப்பாரா அல்லது சிம்பு மட்டும் தனியாக வரும் காட்சி உள்ளதா என்பதை படம் பார்த்தால் தான் தெரிய வரும்.

கமல்ஹாசனின் ‘விக்ரம்’ படத்தில் சூர்யா ஒரு சிறு கேரக்டரில் சிறப்பு தோற்றத்தில் வந்தது போலவே ’வாரிசு’ படத்தில் சிம்பு ஒரு சிறு கேரக்டரில் சிறப்பு தோற்றத்தில் தோன்ற இருப்பதாக வெளிவந்திருக்கும் தகவல் ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

விஜய், ராஷ்மிகா மந்தனா பிரகாஷ்ராஜ், சரத்குமார், ஷாம், யோகிபாபு, பிரபு, ஜெயசுதா, ஸ்ரீகாந்த், சங்கீதா, சம்யுக்தா, உள்பட பலர் நடித்து வரும் இந்த படம் கார்த்திக் பழனி ஒளிப்பதிவில், பிரவிண் கே.எல் படத்தொகுப்பில் உருவாகி வருகிறது. தில் ராஜூ தயாரிப்பில் வம்சி இயக்கத்தில் உருவாகியிருக்கும் இந்த படம் தமிழ், தெலுங்கு மொழிகளில் வெளியாகவுள்ளது.

#cinema

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 152
சினிமாபொழுதுபோக்கு

‘ஜனநாயகன்’ படக் கசிவு: தென்னிந்திய நடிகர் சங்கம் கடும் கண்டனம்!

நடிகர் விஜய்யின் ‘ஜனநாயகன்’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் முன்பே இணையத்தில் சட்டவிரோதமாகக் கசிந்ததற்குத் தென்னிந்திய நடிகர்...

world 148
பொழுதுபோக்குசினிமா

யூடியூபில் 10 கோடி பார்வைகளைக் கடந்த ‘முட்ட கலக்கி’ பாடல்: ‘யூத்’ படத்தின் அசுர வசூல் சாதனை!

நடிகர் கென் கருணாஸ் இயக்கி, கதாநாயகனாக நடித்த ‘யூத்’ (Youth) திரைப்படம் வசூலில் சாதனை படைத்து...

world 137
சினிமாபொழுதுபோக்கு

விஜய்யின் ‘ஜனநாயகன்’ படம் இணையத்தில் கசிவு: 6 பேர் கைது – சைபர் க்ரைம் அதிரடி!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், முன்னணி நடிகருமான விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் இணையதளங்களில் சட்டவிரோதமாகக்...

world 104
சினிமாபொழுதுபோக்கு

பின்னணிப் பாடகி ஆஷா போஸ்லே காலமானார்: இந்திய இசையுலகில் ஒரு சகாப்தம் நிறைவு!

இந்தியத் திரையுலகின் ஈடுஇணையற்ற குரல்களில் ஒன்றான புகழ்பெற்ற பின்னணிப் பாடகி ஆஷா போஸ்லே (92), மாரடைப்பு...