ezgif 3 1e5e5ecdd5
இந்தியாஉலகம்செய்திகள்

ஐ.நா.வில் மகாத்மா காந்தி சிலை

Share

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் தலைவர் பொறுப்பை இந்தியா டிசம்பர் மாதம் ஏற்கிறது. இதையொட்டி மகாத்மா காந்தியின் மார்பளவு சிலை ஒன்றை ஐ.நா.வுக்கு இந்தியா பரிசளித்துள்ளது.

இந்த சிலை ஐ.நா. தலைமையகத்தின் வடபகுதியில் உள்ள புல்வெளியில் நிறுவப்படுகிறது. அடுத்த மாதம் 14-ம் தேதி மத்திய வெளியுறவு மந்திரி ஐ.நா. செல்கிறார். அப்போது இந்த சிலை திறக்கப்படுகிறது.

இந்த சிலை திறப்பு விழாவில் ஐ.நா. பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் மற்றும் பாதுகாப்பு கவுன்சிலின் 15 உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த மகாத்மா காந்தி சிலையை புகழ்பெற்ற சிற்பியும், பத்மஸ்ரீ விருது பெற்றவருமான ராம் சுதர் வடிவமைத்துள்ளார். இதன்மூலம் ஐ.நா. தலைமையகத்தில் முதல் முறையாக மகாத்மா காந்தி சிலை இடம்பெறுகிறது.

முன்னதாக, கடந்த 1982-ம் ஆண்டு சூரிய கடவுளின் சிலை ஒன்றை இந்தியா ஐ.நா.வுக்கு பரிசளித்து இருந்தது. இந்த தகவல்களை ஐ.நா.வுக்கான இந்தியாவின் பிரதிநிதி ருச்சிரா கம்போஜ் தனியார் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

#India

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
ap26059256811672
செய்திகள்உலகம்

ஈரான் மீது அமெரிக்கா – இஸ்ரேல் கூட்டுத் தாக்குதல்: பிரம்மாண்டமான நடவடிக்கை என டிரம்ப் அறிவிப்பு!

ஈரானின் அணுசக்தி நிலையங்கள் மற்றும் ஏவுகணை தளங்களை இலக்கு வைத்து, அமெரிக்க மற்றும் இஸ்ரேலியப் படைகள்...

15 3
செய்திகள்உலகம்

கியூபா எல்லைப்படையில் தாக்குதல்: அமெரிக்கப் படகில் இருந்த நால்வர் உயிரிழப்பு, 6 பேர் கைது!

அமெரிக்காவில் பதிவு செய்யப்பட்ட வேகப்படகொன்றில் இருந்தவர்கள் மீது கியூபா எல்லைக் காவல் படையினர் மேற்கொண்ட துப்பாக்கிப்...

14 1
செய்திகள்உலகம்

வெனிசுலாவில் 3,200 அரசியல் கைதிகள் விடுதலை: புதிய அரசாங்கத்தின் அதிரடி நடவடிக்கை!

வெனிசுலாவில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள பொது மன்னிப்புச் சட்டத்தின் (Amnesty Law) கீழ், 3,200 இற்கும் மேற்பட்ட...

13 1
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

தித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு சிறப்பு உதவித்தொகை: மஹாபொல அறக்கட்டளை அறிவிப்பு!

‘தித்வா’ (Titwa) சூறாவளியால் பாதிக்கப்பட்டுப் பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ளும் பல்கலைக்கழக மாணவர்களுக்கு, சிறப்பு மற்றும் ஒரு...