Elon Musk 16494179903x2 1
உலகம்செய்திகள்தொழில்நுட்பம்

கொத்துக் கொத்தாக விலகும் ஊழியர்கள்! – கவலைப்பட மாட்டேன் என பதிலடி கொடுத்த எலான்

Share

உலகின் முன்னணி பணக்காரரான எலான் மஸ்க், ‘டுவிட்டர்’ சமூக வலைத்தளத்தை கடந்த மாதம் 44 பில்லியன் டாலருக்கு விலைக்கு வாங்கினார். அதன்பிறகு அந்த நிறுவனத்தில் அதிரடி மாற்றங்களை செய்து வருகிறார்.

டுவிட்டரில் சர்வதேச அளவில் 7 ஆயிரத்து 500 ஊழியர்கள் பணியாற்றி வந்தனர். அவர்களில் பாதிப்பேரை பணிநீக்கம் செய்தார். டுவிட்டரை லாபநோக்கத்தில் செயல்பட வைக்க கடுமையாக உழைக்க வேண்டும் என்று ஊழியர்களுக்கு உத்தரவிட்டார்.

வீட்டில் இருந்து பணியாற்றும் கொள்கையில் மாறுதல்களை செய்தார். ஒவ்வொருவரும் அலுவலகத்துக்கு வந்து வாரத்தில் 40 மணி நேரம் பணியாற்ற வேண்டும் என்று உத்தரவிட்டார். 50 சதவீத பணியாளர்கள் நீக்கப்பட்டதால், எஞ்சிய ஊழியர்களுக்கு பணிச்சுமை அதிகரித்தது.

இதற்கிடையே, கடினமாக உழைக்க தயாராக இருப்பவர்கள் மட்டும் நீடிக்குமாறும், மற்றவர்கள் 3 மாத சம்பளத்துடன் விலகிக்கொள்ளுமாறும் கூறிய எலான் மஸ்க், இதுகுறித்து முடிவு எடுக்க நேற்றுமுன்தினம் மாலை 5 மணி வரை ‘கெடு’ விதித்தார்.

‘கெடு’ முடிந்த நிலையில், நூற்றுக்கணக்கான ஊழியர்கள் டுவிட்டரில் இருந்து விலக முடிவு செய்துள்ளனர். கொத்து கொத்தாக விலகி வருகிறார்கள். டுவிட்டரிலேயே ‘குட் பை’ எமோஜிகளை வெளியிட்டு வருகிறார்கள்.

இதுகுறித்து டுவிட்டர் பக்கத்தில் எலான் மஸ்குக்கு ஒருவர் கேள்வி கேட்டிருந்தார். அதற்கு எலான் மஸ்க், ”சிறந்த ஊழியர்கள் பணியில் நீடிக்கிறார்கள். அதனால் நான் பெரிய அளவில் கவலைப்பட மாட்டேன்” என்று பதில் அளித்துள்ளார்.

டுவிட்டர் பயன்பாடு அதிகரித்துள்ளது என்றும் அவர் மற்றொரு பதிவில் தெரிவித்தார். ‘கெடு’ முடிந்தபோது, முக்கியமான ஊழியர்களாக கருதப்பட்ட சிலருடன் எலான் மஸ்க் அவசர ஆலோசனை நடத்தினார். சான் பிரான்சிஸ்கோ அலுவலகத்தில் சிலர் நேரடியாகவும், வேறு சிலர் காணொலி காட்சி வழியாகவும் பங்கேற்றனர். அவர்களை தக்கவைக்க முயற்சி நடந்தது.

”எப்படி வெற்றி பெறுவது என்று எனக்கு தெரியும். வெற்றி பெற விரும்புகிறவர்கள் மட்டும் என்னுடன் சேருங்கள்” என்றும் எலான் மஸ்க் கூறினார். இதற்கிடையே, உலகம் முழுவதும் ‘டுவிட்டர்’ அலுவலகங்கள் 21-ந் தேதி வரை தற்காலிகமாக மூடப்படும் என்றும் டுவிட்டர் நிறுவனம் அறிவித்துள்ளது.

#technology #world

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 57
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஹோமாகமவில் பல்கலைக்கழக மாணவர்களுக்கிடையே மோதல்: 19 வயது இளைஞன் மரணம்; ஐவர் கைது!

ஹோமாகம, மொரகஹஹேன பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தனியார் பல்கலைக்கழக மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில்...

world 56
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஜும்ஆ பிரசங்கங்களின் போது நிதானத்தைப் பேணுமாறு உலமாக்களுக்கு அறிவுறுத்தல்!

நாட்டின் தற்போதைய சூழல் மற்றும் சர்வதேச விவகாரங்களைக் கருத்திற்கொண்டு, ஜும்ஆ பிரசங்கங்களின் போது கதீப்மார்கள் மற்றும்...

world 55
செய்திகள்இலங்கைபிராந்தியம்

புத்தாண்டு விசேட போக்குவரத்துத் திட்டம் ஆரம்பம்: கொழும்பிலிருந்து 2,300 மேலதிக பேருந்துகள் சேவையில்!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு கொழும்பிலிருந்து தமது சொந்த இடங்களுக்குச் செல்லும் பயணிகளுக்காக விசேட...

world 54
செய்திகள்இலங்கை

நெதன்யாகு மீதான ஊழல் வழக்கு மீண்டும் தொடக்கம்; ஈரானின் கடும் விமர்சனம்!

இஸ்ரேலில் ஈரான் உடனான போர் காரணமாக அறிவிக்கப்பட்டிருந்த அவசரநிலை நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு...