sarath
அரசியல்இலங்கைசெய்திகள்

வடக்கு, கிழக்குக்கு அதிகாரம் வழங்கவே கூடாது!!

Share

வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கவே கூடாதென தெரிவிக்கும் முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர ஆனால், அதிகாரப் பரவலாக்கத்தை கண்டிப்பாக வழங்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

வரவு – செலவு திட்டம் மீதான இன்றைய (17) பாராளுமன்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

வடக்கு, கிழக்கு பிரிக்கப்பட்டால் தமிழ்நாட்டில் பிரிவினைவாத கருத்துகள் வளர்ச்சியடையும். இதனால், பூகோளரீதியாக பலமான நாடாக மாற வேண்டும் ஏன்கிற இந்தியாவின் நோக்கத்துக்கும் அச்சுறுத்தல் ஏற்படும். இதனாலேயே புலிகளை தோற்கடிக்க இந்திய அமைதிக்காக்கும் படைகள் இலங்கைக்கு அனுப்பப்பட்டன. எனினும் இதில் ஏற்பட்டத் தோல்விகளாலேயே இந்தியா 13ஆவது திருத்தச் சட்டத்தைக் கொண்டுவந்தது.

வடக்கு, கிழக்கு அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்பட்டால் இலங்கையிலிருந்து அம் மாகாணங்கள் பிரிந்து செல்வதற்கான வாய்ப்புகள் அதிகம். எனவே, ஒருபோதும் அதிகாரப் பகிர்வை வழங்கக்கூடாது. மாறாக கண்டிப்பாக அதிகாரப் பரவலாக்கத்தையே வழங்க வேண்டும். இதுவே இந்தியாவுக்கும், இலங்கைக்கும் பாதுகாப்பு எனவும் தெரிவித்தார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
18 18
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஆட்பதிவுத் திணைக்களத்தின் கணினி அமைப்பில் கோளாறு: நாளை சேவைகள் அனைத்தும் நிறுத்தம்!

ஆட்பதிவுத் திணைக்களத்தின் (Department of Registration of Persons) பிரதான கணினி அமைப்பில் ஏற்பட்டுள்ள திடீர்...

17 19
செய்திகள்இலங்கைபிராந்தியம்

புதிய பேருந்து கட்டண அதிகரிப்பு: நாளை முதல் வழக்கம் போல் பேருந்து சேவைகள்!

இலங்கையில் இன்று (மார்ச் 23, 2026) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் பேருந்து கட்டணங்களை...

16 19
செய்திகள்உலகம்

கச்சா எண்ணெய் விலை அதிரடி வீழ்ச்சி: 100 டொலருக்கும் கீழ் சரிந்த பிரெண்ட் கச்சா எண்ணெய்!

ஈரான் மீதான திட்டமிடப்பட்ட இராணுவத் தாக்குதல்களை அமெரிக்கா அடுத்த 5 நாட்களுக்குத் தற்காலிகமாக ஒத்திவைப்பதாக ஜனாதிபதி...

15 20
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கை – அவுஸ்திரேலியா உறவுகளை வலுப்படுத்த இணக்கம்: ஜனாதிபதியுடன் உயர்ஸ்தானிகர் சந்திப்பு!

இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் பால் ஸ்டீபன்ஸ் (Paul Stephens) மற்றும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க...