முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் அமைந்துள்ள தேவிபுரம் ஆ-பகுதியில் உள்ள மாவீரர் துயிலும் இல்லத்தில் மக்களால் நேற்று (13) சிரமதான பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
எதிர்வரும் 27 ஆம் திகதி மாவீரர் நாளினை நினைவிற்கொள்வதற்காக மக்கள் தயாராகி வருகின்றனர்.
இதற்கமைய, தேவிபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தில் மாவீரர்களின் பெற்றோர்கள், உறவினர்கள் எதிர்வரும் 27 ஆம் திகதி வருகைதந்து தங்கள் உறவினர்களை நினைவிற்கொள்ளலாம் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
#SriLankaNews
Leave a comment