1786100 missile123
உலகம்செய்திகள்

தொடர் ஏவுகணை பரிசோதனை! – ஜப்பானில் அவசரகால எச்சரிக்கை

Share

வடகொரியா இந்த ஆண்டு தொடக்கம் முதலே ஏவுகணை சோதனை அடிக்கடி நடத்தி வருகிறது. இதற்கு தென் கொரியா, அமெரிக்கா, ஜப்பான் ஆகிய நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தாலும் அதை கண்டு கொள்ளாமல் வடகொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனை நடத்துகிறது.

இதற்கிடையே தென் கொரியா- அமெரிக்கா இணைந்து போர் பயிற்சி செய்வதற்கு மிரட்டல்விடும் வகையில் நேற்று ஒரே நாளில் 23 ஏவுகணைகளை வீசி வட கொரியா சோதனை நடத்தியது. தென் கொரியா எல்லையை நோக்கி வீசப்பட்ட ஏவு கணைகளில் ஒன்று தென் கொரியாவின் சோக்கோ நகர் அருகே விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து தென் கொரியாவின் உல்லியுங் தீவில் வான்வழி தாக்குதல் பற்றிய அபாய எச்சரிக்கை எழுப்பப்பட்டது. இதற்கிடையே வடகொரியாவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் தென் கொரியாவும் ஏவுகணை சோதனை நடத்தியது.

வடகொரியா நோக்கி 3 ஏவுகணைகள் வீசப்பட்டன. கொரியா தீபகற்பத்தில் போர் பதற்றம் நிலவும் சூழலில் வடகொரியா இன்று மீண்டும் ஏவுகணை சோதனை நடத்தி உள்ளது. இதுதொடர்பாக தென் கொரிய ராணுவம் கூறும்போது, ‘வடகொரியா இன்று நீண்ட தூர மற்றும் இரண்டு குறுகிய தூர பாலிஸ்டிக் ஏவுகணைகளை வீசியுள்ளது’ என்று தெரிவித்தது.

இந்தநிலையில் இன்று வடகொரியா வீசிய ஒரு ஏவுகணை ஜப்பான் கடல் எல்லையை கடந்து பசிபிக் கடலில் விழுந்தது. காலை 7.48 மணி அளவில் ஜப்பான் மீது ஏவுகணை பறந்ததாக ஜப்பான் அலுவலகம் தெரிவித்தது. இதுதொடர்பாக பாதுகாப்பு அமைச்சர் ஹமாடா கூறும்போது, ‘ஜப்பான் தீவு கூட்டத்தின் மேலே ஏவுகணை சென்றது கண்டறியப்பட்டதால் உடனே எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

இந்த தகவலை சரிபார்த்த பிறகு ஏவுகணை ஜப்பானிய தீவுக்கூட்டத்தை கடக்கவில்லை. ஆனால் ஜப்பான் கடலில் விழுந்ததை உறுதிப்படுத்தி உள்ளோம்’ என்றார்.

வடகொரியா தொடர்ந்து ஏவுகணை வீசி வருவதால் தென்கொரியா, ஜப்பானில் மக்களுக்கு அவசரகால எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தென்கொரியாவின் உல்லியுங் தீவில் உள்ள மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறும், பதுங்கு குழிகளில் தங்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

அதேபோல் ஜப்பானின் வடக்கு பகுதியில் 3 பிராந்தியங்களில் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். இன்று வட கொரியா ஏவுகணையை வீசிய பிறகு ஜப்பான் வடக்கு பகுதியில் உள்ள மக்கள் பாதுகாப்பு இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இதனால் பீதி அடைந்த மக்கள் வீடுகளின் கீழ் பகுதிக்கு சென்று பதுங்கிக் கொண்டனர்.

#world

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
03 19
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் தங்கத்தின் விலை சடுதியாக வீழ்ச்சி: இன்று ஒரே நாளில் ரூ. 13,000 குறைவு!

உலக சந்தையில் தங்கத்தின் விலை வீழ்ச்சியடைந்ததை அடுத்து, இலங்கையிலும் தங்கத்தின் விலை கணிசமாகக் குறைந்துள்ளதாக சந்தைத்...

25 10
இந்தியாசெய்திகள்

டெல்லி தீ விபத்து: மூன்று குழந்தைகள் உட்பட ஒன்பது பேர் பலி; பிரதமர் மோடி இரங்கல்!

இந்தியத் தலைநகர் டெல்லியின் பாலம் (Palam) பகுதியில் உள்ள நான்கு மாடிக் கட்டடம் ஒன்றில் இன்று...

20 17
செய்திகள்அரசியல்இலங்கை

நாமலுக்கு எதிரான மின்சாரக் கட்டண நிலுவை வழக்கு: ஜூலை 1-ம் திகதி உயர் நீதிமன்றத்தில் விசாரணை!

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் திருமண நிகழ்விற்காகப் பயன்படுத்தப்பட்ட மின்சாரத்திற்கான 20 இலட்சம் ரூபாவிற்கும் (2...

19 15
செய்திகள்உலகம்

அலி லாரிஜானி படுகொலைக்கு ஈரான் பதிலடி: டெல் அவிவ் மீது கிளஸ்டர் ரக குண்டுகளால் தாக்குதல்!

ஈரானின் மூத்த பாதுகாப்புத் தலைவரான அலி லாரிஜானி, இஸ்ரேலியத் தாக்குதலில் கொல்லப்பட்டதற்குப் பதிலடியாக, இஸ்ரேலின் டெல்...