1785725 messi
இந்தியாஉலகம்செய்திகள்விளையாட்டு

ஆற்றுக்கு நடுவில் அர்ஜென்டினா வீரர் மெஸ்சியின் கட்-அவுட்

Share

கேரளாவில் கால்பந்து ரசிகர்கள் ஏராளமானோர் உள்ளனர். அர்ஜென்டினா கால்பந்து அணியின் முன்னணி வீரர்கள் பலருக்கும் கேரளாவில் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.

அவர்கள் கால்பந்து வீரர்களின் ஜெர்சி அணிந்தும், அவர்களை போலவே விளையாடியும் தங்கள் அன்பை வெளிப்படுத்தி வந்தனர்.

இந்த நிலையில் கோழிக்கோடு மாவட்டம் செருபுழா பகுதியை சேர்ந்த கால்பந்து ரசிகர்கள் அர்ஜென்டினா கால்பந்து வீரர் லியோனல் மெஸ்சியின் 30 அடி உயரம், 8 அடி அகலம் கொண்ட ராட்சத கட்-அவுட்டை உருவாக்கினர்.

இந்த கட்-அவுட்டை அவர்கள் செருபுழா ஆற்றின் நடுவே வைத்தனர். ஆற்றின் நடுவே அமைக்கப்பட்டுள்ள மெஸ்சியின் கட்-அவுட் அந்த வழியாக சென்றவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

அவர்கள் அதனை செல்போனில் படம் எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். இந்த வீடியோ இப்போது வைரலாகி வருகிறது.

#world #india #sports

Share

1 Comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...