யாழ்பாணம், ஏழாலை பகுதியில் தனது காதலிக்கு காணொளி அழைப்பை ஏற்படுத்தி இளைஞன் ஒருவர் தற்கொலை செய்துக் கொண்டுள்ளார்.
தனியார் கல்வி நிலைய ஊழியராகக் கடமையாற்றும் இளைஞன் ஒருவர் கடந்த 5 வருடமாக யுவதி ஒருவரை காதலித்து வந்துள்ளார்.
இந்நிலையில், காதலியுடன் ஏற்பட்ட முரண்பாட்டின் காரணமாக காணொளி அழைப்பை காதலிக்கு ஏற்படுத்தி குறித்த இளைஞன் தனது உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்.
இந்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளதாக அததெரண செய்தியாளர் தெரிவித்தார்.
யாழ்ப்பாணம் ஏழாலையைச் சேர்ந்த 25 வயதுடைய இளைஞனே இவ்வாறு உயிரை மாய்துள்ளதாக தெரிய வந்துள்ளது.
மரணம் தொடர்பில் மரண விசாரணையை யாழ்.போதனா வைத்தியசாலை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிரேமகுமார் மேற்கொண்ட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.
#SriLankaNews
Leave a comment