1781913 chilli bread
சமையல் குறிப்புகள்பொழுதுபோக்கு

சில்லி பிரெட்

Share

தேவையான பொருட்கள்:

பிரெட் ஸ்லைஸ் – 10
தக்காளி சாஸ் – ஒரு தேக்கரண்டி
சிவப்பு கேசரி கலர் – சிறிதளவு
கொத்தமல்லி இலை – அரை கட்டு
எலுமிச்சை ஜுஸ் – சிறிதளவு
கரம் மசாலா தூள் – 2 தேக்கரண்டி
வெங்காயம் – 2
தக்காளி – 2
கீறிய பச்சை மிளகாய் – 3
மிளகாய் தூள் – 2 தேக்கரண்டி
நெய் – ஒரு தேக்கரண்டி
எண்ணெய் – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு

செய்முறை

தக்காளி, வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

பிரெட்டை சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.

வாணலியில் நெய் விட்டு பிரெட் துண்டுகளை வறுத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

அதே வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் வெங்காயம், கீறிய பச்சை மிளகாய் போட்டு வதக்கவும்.

வெங்காயம் நன்கு வதங்கிய பின் தக்காளி போட்டு வதக்கவும். தக்காளி வதங்கிய பின்னர் தக்காளி சாஸ், சிவப்பு கேசரி கலர், மிளகாய் தூள், கரம் மசாலா தூள் போட்டு வதக்கவும்.

மசாலா பச்சை வாசனை போனவுடன் வறுத்து வைத்துள்ள பிரெட் துண்டுகள், உப்பு போட்டு நன்றாக கிளறி இறக்கவும்.

பரிமாறும் முன் கொத்தமல்லி இலை, எலுமிச்சை ஜுஸ், சிறிது வெங்காயம் சேர்த்து பரிமாறவும்.

இப்போது சுவையான, காரமான குழந்தைகளுக்கு விருப்பமான சில்லி பிரெட் தயார்.

#LifeStyle

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Vishal
சினிமாபொழுதுபோக்கு

லைகா நிறுவன கடன் விவகாரம்: ரூ.10 கோடியைச் செலுத்த அவகாசம் கோரும் நடிகர் விஷால்!

லைகா நிறுவனத்திற்கு வழங்க வேண்டிய கடன் தொகை விவகாரத்தில், 10 கோடி ரூபாயை நீதிமன்றத்தில் வைப்பீடு...

mandaadi soori
பொழுதுபோக்குசினிமா

75 கோடி பட்ஜெட்; படகுப் பந்தயக் களம்: சூரியின் மண்டாடி படப்பிடிப்புத் தகவல்கள்!

தமிழ் சினிமாவில் ஆரம்பத்தில் காமெடி கதாபாத்திரங்களில் மட்டுமே நடித்து தற்போது கதாநாயகனாக உயர்ந்துள்ளவர் நடிகர் சூரி....

124612405 1
பொழுதுபோக்குசினிமா

லிட்டில் சூப்பர்ஸ்டார் சிம்புவிற்கு இன்று 43-வது பிறந்தநாள்! அரசன் அப்டேட்டிற்காக ரசிகர்கள் காத்திருப்பு.

தமிழ் திரையுலகில் பன்முகத்திறமை கொண்ட கலைஞராகத் திகழும் நடிகர் சிலம்பரசன் (STR), இன்று தனது 43-வது...

w 1280h 720format jpgimgid 01jv124n1esch86bfq6dcear1dimgname rajinikanth jailer 2 1747013751854
சினிமாபொழுதுபோக்கு

ஜெயிலர் 2 படத்தில் ஷாருக் கான்! ரஜினியின் நண்பராக நடிக்கும் பாலிவுட் பாட்ஷா?

இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் ‘ஜெயிலர் 2’ திரைப்படம், இந்தியத்...